கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில், அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இருப்பினும், குணமடைந்தவரின் எண்ணிக்கையும் அதற்குச் சமமாக உள்ளது. தற்போது குணமடைந்தவரின் விழுக்காடு 92 ஆக உள்ளது.
சென்னையில், நேற்று (ஏப்ரல் 12 ) மட்டும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், கரோனா பரவல் விகிதம் 6க்கும் மேல் உள்ளது. மொத்தம் இரண்டு லட்சத்து 67 ஆயிரத்து 181 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 751 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேபோல், 4332 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் ஒரு தெருவில் மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் கரோனா பாதிக்கப்பட்டால் அதை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்ற அரசு தெரிவித்துள்ளது. தற்போது, 1120 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது.
இதை தொடர்ந்து, கரோனா பாதித்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மீண்டும் இன்று (ஏப்ரல் 13) சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. மேலும், வெளி மாநிலத்தில் இருந்து வந்தால் மற்றும் அந்த வீட்டில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டால் மாநகராட்சி ஊழியர்கள் ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்.
அதில், அந்த ஸ்டிக்கரில் வெளி நாடுகளில் இருந்து வந்தால் அவர் பெயர், எங்கு இருந்து வந்துள்ளார். மேலும், கரோனா தொற்று ஏற்பட்டால் எத்தனை நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எனவும் அதில் எழுதப்படுகிறது.
இதையும் படிங்க: ’ஸ்புட்னி வி’ தடுப்பூசி: ஆண்டுக்கு 85 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யவுள்ள இந்தியா!