சென்னை : கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப் படிப்பில் சேர்வதற்கு இந்த ஆண்டு 13 ஆயிரத்து 901 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நவம்பர் மாதம் 18ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவல் கல்லூரியில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள 118 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 59 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வுக்கான பதிவு ஆன்லைன் மூலம் டிசம்பர் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 13ஆம் தேதி வரை மாணவர்கள் தங்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுப் பிரிவு மாணவர்கள் நாளை முதல் 28ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கலந்தாய்வில் பங்கேற்க பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் அவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும். இந்தக் கலந்தாய்வு ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பிவிஎஸ்சி & ஏவி படிப்பில் கால்நடை மருத்துவப் படிப்பில் 480 இடங்களும், பிடெக் உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின வளர்ப்பு தொழில்நுட்பத்தில் 80 இடங்களும், பால்வளத் தொழில் நுட்பத்தில் 20 இடங்களும் உள்ளன.
இந்த ஆண்டு சேலம், உடுமலைப்பேட்டை, தேனி ஆகிய இடங்களில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகளில் தலா 40 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி அரசு அறிவித்த பின்னர் தெரிவிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தேதி அறிவிப்பு