- நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளது.
- இதன்மூலம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி உட்பட இரண்டு பேரூராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது.
மறைமுக தேர்தல் முடிவுகள் : சென்னை மாநகராட்சியின் 340 ஆண்டு கால வரலாற்றில், இது ஒரு மைல்கல் - அமமுக இரண்டு பழனிசெட்டிப்பட்டி ஒரத்தநாடு பேரூராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது
13:48 March 04
இரண்டு பேரூராட்சிகளை கைப்பற்றிய அமமுக
13:20 March 04
ஸ்டாலின் உத்தரவை மீறிய திமுகவினர் - அறிவாலயத்தில் அவசர ஆலோசனை
- திமுக கூட்டணியில், போட்டி வேட்பாளர்கள் வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
- சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
- கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்றது குறித்து இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
13:05 March 04
திருப்பூர் மாநகராட்சி மேயரானார் திமுகவின் தினேஷ்குமார்!
திருப்பூர் மாநகராட்சி மேயராக திமுகவின் தினேஷ்குமார் தேர்வானார்.
12:40 March 04
21 மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி!
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலில் 21 மாநகராட்சி மேயர் பதவிகளை திமுக கூட்டணி வெற்றி கைப்பற்றியுள்ளது.
12:35 March 04
சிவகாசி மாநகராட்சி மேயராக சங்கீதா பதவியேற்பு
புதியதாக உருவாக்கப்பட்ட சிவகாசி மாநகராட்சியின் மேயராக சங்கீதா போட்டியின்றி தேர்வானார்.
12:09 March 04
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் பதவியேற்பு
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திமுகவின் சரவணன் போட்டியின்றி தேர்வானார்.
நெல்லை மேயராக பி.எம். சரவணன் தேர்வு
குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி
- நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக சார்பாக ஜான்சி ராணியும் திமுக சார்பாகக் கமலா நேரு போட்டியிட்டனர்.
- தேர்தலில் இருவரும் சம ஓட்டு வாங்கியதால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அதிமுக ஜான்சிராணி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்
12:05 March 04
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக மகாலட்சுமி வெற்றி
புதியதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயரை தேர்தெடுக்க இன்றைய தினம் நடைபெற்ற மறைமுக தேர்தலில் 50மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இதில் திமுக தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ்வை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த சூர்யா சோபன்குமாரை விட கூடுதலாக வாக்குகள் பெற்று மகாலட்சுமி யுவராஜ் வெற்றிப் பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்று, திமுக நிறுவனர் அறிஞர் அண்ணாவின் மண்ணில் இருந்து மக்களுக்கு பணியாற்ற உள்ளார்.
11:59 March 04
சுயேச்சை வேட்பாளர் பேரூராட்சி தலைவராக வெற்றி
- கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மாற்றம் என்ற அணி சார்பாக 14 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 9 பேர் வெற்றி பெற்றனர்.
- இதனையடுத்து அந்த அணியின் தலைவரான சசிகுமார் இன்று பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் சுயச்சை ஒருவர் பேரூராட்சி தலைவர் ஆனது இங்குதான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஊருக்கு நீ உழைத்தால் வெற்றி நிச்சயம்!
11:48 March 04
அந்தியூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
11:45 March 04
வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு
11:39 March 04
ஓசூர் மாநகராட்சியில் மேயர் தேர்தலில் திமுக வெற்றி
ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி பரபரப்பாக நடந்த தேர்தலில் சத்யா 27 வாக்குகளும், அதிமுகவின் பால நாராயணன் 18 வாக்குகளும் பெற்றனர்.
11:29 March 04
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் வெற்றி
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் ராமநாதன் வெற்றி
11:24 March 04
புதிய மேயராக தேர்வான பிரியா - அனைவருக்கும் நன்றி
சென்னை மாநகராட்சியின் புதிய மேயராக தேர்வான பிரியா, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
11:22 March 04
கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி வெற்றி
கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி வெற்றி எதிர்த்துப் போட்டியிட்ட அதிருப்தி வேட்பாளர் கீதா குணசேகரன் தோல்வி
11:21 March 04
திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இளமதி
- திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக போட்டியின்றி தேர்வானார் திமுக வேட்பாளர் இளமதி
- திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் இளமதிக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செங்கோல் ஆகியோர் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.
11:03 March 04
நாகர்கோவில் மேயரானார் திமுகவின் மகேஷ்
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மகேஷ் வெற்றி எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் மீனா தேவ் தோல்வி அடைந்தார்.
11:01 March 04
காங்கிரஸ் ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வேட்பாளர் வெற்றி
- காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேனி - அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் மனுத்தாக்கல்
- காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் ரேணுப்பிரியா வெற்றி
10:42 March 04
திருச்சி மாநகராட்சியில் நேருவின் விசுவாசியான அன்பழகன் மேயராக தேர்வு
- திருச்சி மாநகராட்சி மேயராக திமுகவின் அன்பழகன் போட்டியின்றி தேர்வானார்.
- 1994ல் திருச்சி மாநகராட்சி ஆனதிலிருந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு, திமுகவை சேர்ந்த ஆண் ஒருவர் முதல் முறையாக மேயராக பதவியேற்றது இதுவே முதல் முறை.
- திருச்சி மாநகராட்சியில் திமுக தனிப்பெரும்பான்மையாக 49 இடங்களை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- திருச்சி மாநகராட்சியில் கே.என்.நேருவின் விசுவாசியான அன்பழகன் மேயராக தேர்வானார்
திருச்சி மேயராக பதவி கிடைத்த பின்னணி
10:41 March 04
சேலம் மாநகராட்சி மேயராக இராமச்சந்திரன் தேர்வு
சேலம் மாநகராட்சி மேயராக திமுகவின் இராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வானார்!
10:34 March 04
தாம்பரம் மாநகராட்சி முதல் மேயராக வசந்தகுமாரி பதவியேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளது. இதில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் பதிவேற்றினார். அதனைத் தொடர்ந்து இன்று தாம்பரம் மாநகராட்சி மேயராக 32 வார்டில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த வசந்தகுமாரி கமலக்கண்ணன் அவர்களை மேயராக மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயரான பட்டியலின பெண்!!!
10:24 March 04
வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா தேர்வு
வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா ஆனாந்தகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்
10:24 March 04
அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்துக்குள் கல்வீச்சு
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டத்தில் இருக்கும் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்துக்குள் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.
அன்னவாசல் பேரூராட்சி தலைவர் தேர்வுக்கு எதிர்ப்பு; திமுகவினர் போராட்டம்!
10:19 March 04
கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் சரவணன்!
- ஆட்டோ டிரைவர் சீருடையிலேயே கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த காங்கிரஸ் வேட்பாளர்.
- கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயரானார் சரவணன்
10:07 March 04
தூத்துக்குடி மேயர்
தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வானார் திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி
10:00 March 04
மதுரை மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வு
- மதுரை மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வானார் திமுக வேட்பாளர் இந்திராணி
- இந்திராணி மதுரை மாநகராட்சியின் 8ஆவது மேயர்.
101 சவரன் தங்க அங்கியில் ஜொலிக்கும் மதுரை பெண் மேயர்!!!
முதல் பெண் மேயராக

09:56 March 04
கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா
- கோவை மாநகராட்சியின் புதிய மேயராக திமுக வேட்பாளர் கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு.
- கோவையின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கல்பனா ஆனந்தகுமார்.
09:48 March 04
மேயர் பிரியாக்கு சிவப்பு அங்கி, தங்க செயின் வழங்கப்பட்டது...
- சென்னை மாநகராட்சியின் பட்டியலினப் பெண் மேயராக திமுகவின் பிரியா தேர்வானார்
- சென்னையின் 340 ஆண்டு கால வரலாற்றில், இது ஒரு மைல்கல்..
- மேயர் பிரியாக்கு சிவப்பு அங்கி, தங்க செயின் வழங்கப்பட்டது
- அடுத்து செங்கோல் வழங்கி மேயர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார்.
- சென்னையின் புதிய மேயராக தேர்வான பிரியாவுக்கு, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் செங்கோல் வழங்கினர்.
சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் பதவியேற்பு -நேரலை
09:43 March 04
சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா தேர்வு
- சென்னை மாநகராட்சியின் 74ஆவது வார்டு உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜன் மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்
- திமுகவின் பிரியா மட்டுமே வேட்புமனு தாக்கல் - போட்டியின்றி பிரியா தேர்வு செய்யப்பட்டதாக ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு
- சென்னை மாநகராட்சியின் மேயராக திமுகவின் பிரியா தேர்வானார்
- வடசென்னை To ரிப்பன் பில்டிங்; சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயர் வேட்பாளர்!
- சென்னையின் இளம் பட்டியலின பெண் மேயர் வேட்பாளர் - 340 ஆண்டுகால வரலாற்றில் ஒரு மைல்கல்!
09:40 March 04
மேயர் தேர்தலை அதிமுக புறக்கணிப்பு
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலை அதிமுக புறக்கணிப்பு, ஒரு மாமன்ற உறுப்பினர் கூட கலந்து கொள்ளவில்லை
09:32 March 04
சென்னை மேயராக பிரியா போட்டியின்றி தேர்வாகிறார்
- சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பாக போட்டியிடும் பிரியா மனு தாக்கல் செய்தார்.
- சென்னை மேயராக பிரியா போட்டியின்றி தேர்வாகிறார்.
09:30 March 04
ரிப்பன் மாளிகை வருகை தந்த பிரியா
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பாக போட்டியிடும் பிரியா, மனுத்தாக்கல் செய்ய ரிப்பன் மாளிகை வருகை, அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர்.
08:42 March 04
சென்னை மாநகராட்சி மேயராகிறார் பிரியா
சென்னை மாநகராட்சி மறைமுக தேர்தல் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது. திமுக வேட்பாளர் பிரியா தவிர்த்து வேறுயாரும் வேட்புமனு பெறவில்லை என்பதால், போட்டியின்றி மேயராகிறார் பிரியா. இதனையடுத்து, 9.30 மணிக்கு சென்னை மாநகராட்சி அவை தொடங்கியவுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, போட்டியின்றி தேர்வானதை அறிவிக்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக பதவிப்பிரமாணம் நடைபெறவுள்ளது.
08:36 March 04
21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி
21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணியின் மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
08:12 March 04
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இதனையடுத்து, வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் (மார்ச்.2) பதவி ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து, பதவியேற்பு விழாவிற்கு பிறகு இன்று மார்ச் 4ஆம் தேதி காலை 9:30 மணி அளவில் மேயர் மறைமுகத் தேர்தலும்; நண்பகல் 2:30 அளவில் துணை மேயர் மறைமுகத் தேர்தலும் நடைபெறுகிறது.