ETV Bharat / state

'தமிழ்நாடு முன்னோடி மாநிலம் என்று தம்பட்டம் அடிப்பதை நிறுத்திக்கொள்க!' - காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

எளிதாக தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 14ஆவது இடத்தில் உள்ளது. ஆகவே இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று தம்பட்டம் அடிப்பதை இனியாவது ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம் என்று தம்பட்டம் அடிக்க வேண்டாம் - கே.எஸ்.அழகிரி

author img

By

Published : Sep 7, 2020, 10:08 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில தொழில் சீர்த்திருத்த செயல்திட்டம் - 2019 அடிப்படையில் எளிதாகத் தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

கட்டுமான அனுமதி, தொழிலாளர்கள் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பதிவு, தகவல்கள் அணுகுதல், நிலம் கிடைக்கும் தன்மை, ஒற்றைச்சாளர அனுமதி எனப் பல அம்சங்களின் அடிப்படையில் ஆராயப்பட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எளிதாகத் தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறது. தமிழ்நாடு 14ஆவது இடத்தில் உள்ளது. ஆந்திர மாநிலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தவரை 2018ஆம் ஆண்டு 12ஆவது இடத்தில் இருந்த உத்தரப் பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

இந்தத் தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தவரை மத்திய அரசே வெளியிடுவதன் மூலம் மாநிலங்களிடையே தொழில் தொடங்குவதற்கான சீர்த்திருத்த நடவடிக்கைகளையும், தொழில் தொடங்க எளிதாக அனுமதி வழங்குவதிலும், போட்டித் தன்மையை வளர்த்து, முதலீடுகளை அதிகமாக பெறுவதற்கு வழிவகை செய்கிறது.

இந்த வகையில் முதல் பத்து மாநிலங்களில்கூட இடம்பெற முடியாமல் தமிழ்நாடு 14ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது பல்வேறு நிலைகளில் முதலீடுகளை பாதிப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிற முதலீட்டுத் தொகைக்கும், வேலைவாய்ப்பு எண்ணிக்கைக்கும் என்ன அடிப்படை ஆதாரம் என்று எவராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

அறிவிப்புகள் எல்லாம் ஒரே மர்மமாக இருக்கின்றன. எந்த இடத்தில், எந்தத் தொழிற்சாலையில், எத்தனை பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன என்ற தகவலைத் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் உடனே வெளியிட வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று தம்பட்டம் அடிப்பதை இனியாவது மாநில ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி குன்றி, தாழ்ந்த நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதை மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலே அம்பலப்படுத்தியிருப்பதை முதலமைச்சர் உணர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.