இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், தென்சென்னை மாவட்ட செயலாளர் சந்துரு உள்ளிட்டோர், கல்லூரியில் இறுதி ஆண்டு இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சந்துரு கூறியதாவது, "தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டாய இணையவழி தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடக்கிறது.
அதுபோன்று தேர்வுகளை நடத்தாமல் அதனை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசிற்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே கல்லூரிகளில் கரோனா தனிமைப்படுத்தும் வார்டு உள்ளதால் தேர்வு நடத்த முடியாது எனக் கூறியுள்ளது.
இதனை வலியுறுத்தி தேர்வு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: 75% கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக தனியார் பள்ளிகள் பெறலாம்: தமிழ்நாடு அரசு தகவல்