கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் மங்களூரு எக்ஸ்பிரஸில் தனது 18 மகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். காட்பாடி ரயில் நிலையம் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது இளம்பெண் தூங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணிற்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிடவே, சக பயணிகள் அந்த இளைஞரைப் பிடித்து ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், ரயில் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தவுடன் மத்திய ரயில்வே துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவர் கேரளா மாநிலம் பயனூர் பகுதியைச் சேர்ந்த பைஜூ குட்டமால் (33) என்பது தெரியவந்தது.
மேலும், இவர் இந்தியா திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. போதையிலிருந்ததன் காரணமாக இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரயில்வே மேம்பாலப் பணிகளை நேரில் ஆய்வுசெய்த ஆட்சியர்!