சென்னை: கரோனாவால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 3 ஆயிரத்து 256 ரயில்வே ஊழியர்கள் பணியில் இருக்கும் போதே உயிரிழந்தனர்.
இதனையடுத்து முதற்கட்டமாக அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 2 ஆயிரத்து 800 பேருக்கு வேலை வழங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
மீதமுள்ள பாதிக்கப்பட்டவர்களின் உறுப்பினர்கள் 18 வயதைக் கடந்ததும், அவர்களும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் நான்கு மாதத்துக்குள் ’டி’ பிரிவில் கடைநிலை பணி தரப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விமானப்படை அலுவலர் அமிதேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு