ETV Bharat / state

இந்தியன் வங்கியின் நிகர லாபம் 247 கோடி ரூபாயாக உயர்வு! - நிகர லாபம்

சென்னை: இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள தனது மூன்றாவது காலாண்டின் நிதிநிலை அறிக்கைப்படி, நிகர லாபம் 62 சதவிகிதம் அதிகரித்து 274 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்தியன் வங்கியின் நிகர லாபம் 247 கோடி ரூபாயாக உயர்வு!

author img

By

Published : Jan 24, 2020, 10:42 PM IST

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி இன்று தனது மூன்றாவது காலாண்டின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது. நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை), இந்தியன் வங்கியின் நிகர லாபம் 62 சதவிகிதம் அதிகரித்து 247 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வங்கியின் நிகர லாபம் 971 கோடி ரூபாயாக உள்ளது.

நடப்பு காலாண்டில், இந்தியன் வங்கியின் ஒட்டுமொத்த லாபம் 6,506 கோடி ரூபாயாக உள்ளது. வங்கியின் பிரதான வருவயான நிகர வட்டி வருவாய், நடப்பு நிதியாண்டில் 14 சதவிகிதம் அதிகரித்து 1,955 கோடி ரூபாயாக உள்ளது. வங்கியின் மொத்த வாராக்கடன் மாற்றமின்றி 7.2 சதவிகிதம் என்ற அளவிலேயே தொடர்கிறது. நிகர வாராக்கடன் 3.54 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் வங்கியின் தலைமை செயல் அதிகாரி பத்மஜா சுண்டூரு, "இந்தியன் வங்கியின் மொத்த வணிகம் 4.5 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது, வங்கியின் சொத்து மற்றும் கடன்கள் (பேலன்ஸ் ஷீட்) 3 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. கடன் கொடுப்பது மற்றும் டெபாசிட்டுகள் அதிகரித்ததால் வங்கியின் ஒட்டுமொத்த வணிகம் அதிகரித்துள்ளது.

இந்தியன் வங்கியின் நிகர லாபம் 247 கோடி ரூபாயாக உயர்வு!

டிஹெச்ஃஎப்எல் நிறுவனத்துக்கு வழங்கிய மிகப் பெரிய கடன் வாராக்கடனாக உள்ளபோதிலும் நாங்கள் வாராக்கடன்களை கட்டுக்குள் வைத்துள்ளோம். அலஹாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் இணைக்கும் பணி இந்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன் நிறைவடையும். இந்தியன் வங்கிக்கு தெற்கு பகுதிகளில் அதிக கிளைகள் உள்ள நிலையில், அலஹாபாத் வங்கிக்கு நாட்டின் மத்திய, வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் அதிக சேவை உள்ளது. இரண்டு வங்கிகளும் இணைவதன் மூலம் இந்தியன் வங்கி தனது சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்த முடியும். வங்கிகள் இணைப்பு நடவடிக்கை சீராக நடைபெற்று வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படுவோம். இணைப்புக்குப் பிறகு இந்தியன் வங்கியின் பெயர் மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: வேலைவாய்ப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் 106 காலிப்பணியிடங்கள்!

Intro:Body:இந்தியன் வங்கியின் நிகர லாபம் அதிகரிப்பு

சென்னை: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி இன்று தனது மூன்றாவது காலாண்டின் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது. நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை), இந்தியன் வங்கியின் நிகர லாபம் 62 சதவிகிதம் அதிகரித்து 247 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வங்கியின் நிகர லாபம் 971 கோடி ரூபாயாக உள்ளது.

நடப்பு காலாண்டில், இந்தியன் வங்கியின் ஒட்டுமொத்த லாபம் 6,506 கோடி ரூபாயாக உள்ளது. வங்கியின் பிரதான வருவயான நிகர வட்டி வருவாய், நடப்பு நிதியாண்டில் 14 சதவிகிதம் அதிகரித்து 1,955 கோடி ரூபாயாக உள்ளது. வங்கியின் மொத்த வாராக்கடன் மாற்றமின்றி 7.2 சதவிகிதம் என்ற அளவிலேயே தொடர்கிறது. நிகர வாராக்கடன் 3.54 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் வங்கியின் தலைமை செயல் அதிகாரி பத்மஜா சுண்டூரு, "இந்தியன் வங்கியின் மொத்த வணிகம் 4.5 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது, வங்கியின் சொத்து மற்றும் கடன்கள் (பேலன்ஸ் ஷீட்) 3 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. கடன் கொடுப்பது மற்றும் டிபாசிட்டுகள் அதிகரித்ததால் வங்கியின் ஒட்டுமொத்த வணிகம் அதிகரித்துள்ளது. டிஹெஃஎப்எல் நிறுவனத்திக்கு வழங்கிய மிகப் பெரிய கடன் வாராக்கடனாக உள்ளபோதிலும் நாங்கள் வாராக்கடன்களை கட்டுக்குள் வைத்துள்ளோம். அலஹாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் இணைக்கும் பணி இந்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் நிறைவடையும். இந்தியன் வங்கிக்கு தெற்கு பகுதிகளில் அதிக கிளைகள் உள்ள நிலையில் அலஹாபாத் வங்கிக்கு நாட்டின் மத்திய, வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் அதிக சேவை உள்ளது. இரண்டு வங்கிகளும் இணைவதன் மூலம் இந்தியன் வங்கி தனது சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்த முடியும். வங்கிகள் இணைப்பு நடவடிக்கை சீராக நடைபெற்று வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் வங்கியன் வாடிக்கையாளர்கள் சிரமம் ஏற்படாதவாறு செயல்படுவோம். இணைப்புக்குப் பிறகு இந்தியன் வங்கியின் பெயர் மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது"
என்று கூறினார்.

ஆங்கில பேட்டி- பத்மஜா சுன்டூரு- இந்தியன் வங்கி தலைமை செயல் அதிகாரி.
தமிழ் பேட்டி- செழியன், இந்தியன் வங்கி பொது மேலாளர்

Conclusion:visual, bite in live kit
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.