சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை மைய அலுவலகத்தில், 20 ஆண்டுகளாக தங்களுக்குப் பணி உயர்வு வழங்கப்படவில்லை என ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் வானிலை ஆய்வு மையத்தின் குழு B,C,D மற்றும் 6 சங்கங்களும் பங்கேற்றுள்ளது. இந்தப் போராட்டம் நாடுதழுவிய போராட்டமாக மாறும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் எச்சரித்தனர்.
இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் மண்டல செயலாளர் சம்பத் கூறுகையில், 'கரோனா மற்றும் புயல் காலங்களில், 24 மணி நேரமும் பணிசெய்துள்ளோம். ஆனால், அதற்கான அங்கீகாரமோ, பணி உயர்வோ வழங்கவில்லை. பணி உயர்வு பெறுவோர் பட்டியல் தயார் செய்யப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளது. சரியான முறையில் அந்த பட்டியலை தயார் செய்ய வேண்டும்' என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!