சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாவது,
“இன்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் மற்றும் நிதியமைச்சர் உண்மைக்கு புறம்பான பல்வேறு விஷயங்களை பேசி உள்ளனர்.
பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்யும் பட்டியலில் தான் இந்தியா இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் வாட் வரியைக் குறைத்தால் ஒரு லட்சம் கோடி இழப்பீடு ஏற்படும் என அறிக்கை சொல்கிறது.
கடந்த நவம்பர் மாதம் முதல் 2,800 கோடி ரூபாய் வாட் வரியாக தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வரும் வருவாயை மத்திய அரசு வீட்டிற்கு கொண்டு செல்லவில்லை. தடுப்பூசி உட்பட பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:'பிணவறையில் நான் வைத்த முதல் மாலை 8ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு'- அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் உருக்கம்!