ETV Bharat / state

லண்டன் பயணத்தின் மூலம் மருத்துவ சுற்றுலா அதிகரிக்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர் - Increase medical tourism

சென்னை: லண்டன் பயணத்தின் மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
author img

By

Published : Aug 28, 2019, 12:48 PM IST

அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்றுள்ளார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் லண்டனில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதலமைச்சர் கையெழுத்திட உள்ளதாக தெரிவித்தார். லண்டனில் உள்ள உலகப்புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சென்னையில் உருவாக்குவது, உலகத் தரத்திலான சேவைகளை தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் வழங்குவது,
பல்வேறு துறைகளில் தரமான மருத்துவ சேவைகளை வழங்குவது உள்ளிட்ட நோக்கத்திற்காக மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதாகவும் குறிப்பிட்டார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தொடர்ந்து பேசிய அமைச்சர், 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் சிறந்த சேவையை வழங்கி வரும் நிலையில், சுகாதார சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் லண்டனில் உள்ள 999 என்று சொல்லக்கூடிய அதிநவீன ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலா இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

Intro:லண்டன் பயணத்தின் மூலமாக தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா (Medical tourism)
முதல்வரோடு லண்டன் செல்லும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:லண்டன் பயணத்தின் மூலமாக தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா (Medical tourism)
முதல்வரோடு லண்டன் செல்லும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் லண்டனில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதல்வர் கையெழுத்திட உள்ளார். வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு இது.

டெங்கு மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்கனவே நாம் சிறப்பாக கையாண்டு வருகிறோம்.இதை உலகத்தரத்தில் கையாளுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக செவிலியர்கள் லண்டனிலும் லண்டன் செவிலியர்கள் தமிழகத்திலும் பயிற்சி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

லண்டனில் உள்ள உலகப்புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனை சென்னையில் புதிய மருத்துவனை கிளையை உருவாக்கவும், உலக தரத்திலான சேவைகளை நம்முடைய அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்துவதற்கும் பல்வேறு துறைகளில் தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு சேர்த்து 3 ஒப்பந்தங்களை முதல்வர் கையெழுத்திட இருக்கிறார்.

நம்முடைய 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் சிறந்த சேவையை வழங்கி வரும் நிலையில், சுகாதார சேவை மேலும் மேம்படுத்தும் வகையில், லண்டனில் உள்ள 999 என்று சொல்லக்கூடிய அதிநவீன ஆம்புலன்ஸ் சேவை இங்கு செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆண்டு டெங்கு சிறப்பாக தமிழக அரசால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று நோய்களை வளர்ந்த நாடுகளில் எப்படி கட்டுப்படுத்துகிறார்கள் என்ற தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டு அதேபோன்ற தொழில்நுட்பத்தை இங்கும் கையாள இந்த பயணம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பயணத்தின் மூலம் தமிழக சுகாதாரத்துறை அடுத்த இலக்கை நோக்கி அடைய உள்ளது.

இந்திய மருத்துவர்கள் லண்டனில் 20% பேர் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் யார் எந்த சிகிச்சை விரும்பினாலும் உடனடியாக செய்யக்கூடிய வசதிகள் இருக்கின்றது தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம்.

இந்த பயணத்தின் மூலமாக தமிழகத்தின் மெடிக்கல் டூரிஸம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.