ETV Bharat / state

மதுரை ரயில்வே கோட்டம் சரக்கு போக்குவரத்து வருமானம் அதிகரிப்பு - தெற்கு ரயில்வே அளவில் கடந்த மாதம் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூபாய் 283.36 கோடி

நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் மதுரை கோட்ட சரக்கு போக்குவரத்து வருமானம் அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

ரயில்வே சரக்கு போக்குவரத்து வருமானம் அதிகரிப்பு - மதுரை ரயில்வே கோட்டம் சாதனை

author img

By

Published : May 3, 2022, 9:02 AM IST

மதுரை: இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த ஏப்ரல் மாதம் 3166 சரக்கு பெட்டிகளில் நிலக்கரி, உரம், சுண்ணாம்புக்கல், கருவேலங்கரி, ஜிப்சம் ஆகியவை மதுரை கோட்டத்தில் இருந்து பல்வேறு ரயில் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 688 சரக்கு பெட்டிகள் அதிகம். கடந்த ஏப்ரல் மாதம் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூபாய் 20.18 கோடியாகும் இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூபாய் 3.12 கோடி அதிகம். மதுரை கோட்ட வணிக வளர்ச்சி குழுவின் முயற்சியின் காரணமாக பொட்டாசியம் உரம் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து விஜயவாடா அருகே உள்ள கோவூருக்கு ஒரு முழு சரக்கு ரயிலில் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் மதுரை கோட்டத்திற்கு ரூபாய் 35 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

தெற்கு ரயில்வே அளவில் கடந்த மாத சரக்கு போக்குவரத்து சென்ற ஆண்டைக் காட்டிலும் 17% அதிகமாகியுள்ளது. தெற்கு ரயில்வே அளவில் கடந்த மாதம் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூபாய் 283.36 கோடி ஆகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 18 சதவீதம் அதிகம். தெற்கு ரயில்வே அளவில் நிலக்கரி, உணவு பொருட்கள் சிமெண்ட், பெட்ரோலிய பொருட்கள், உரம் ஆகியவற்றின் போக்குவரத்து கடந்த ஆண்டை காட்டிலும் முறையே 24, 46, 27, 21, 14 சதவீதம் அதிகமாகியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மதுரையில் தடம் புரண்ட சரக்கு ரயில் - மற்ற ரயில்கள் இயங்குவதில் சிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.