ETV Bharat / state

பண்டிகை கால தொடா் விடுமுறை: உள்நாட்டு விமான சேவை டிக்கெட் கட்டணம் உயர்வு

பண்டிகை கால தொடா் விடுமுறையால் உள்நாட்டு விமான சேவை பயண கட்டணம் உயர்ந்ததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

airline
airline
author img

By

Published : Oct 13, 2021, 7:36 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளை (அக்.14) முதல் தொடர்ந்து நான்கு நாள்கள் விடுமுறை வருகிறது. சென்னையிலிருந்து விடுமுறை காரணமாக சொந்த ஊா்களுக்கு செல்லும் பயணிகளால் பேருந்து, ரயில்களில் கூட்டம் நிறைந்து வழிகிறது.

பேருந்து, ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணங்களை மேற்கொள்கின்றனா். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிறைந்தது. அக்டோபர் 12ஆம் தேதி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 190 விமானங்கள் இயக்கப்பட்டு 15 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.

ஆனால் இன்று (அக்.13) 213 விமானங்கள் இயக்கப்பட்டு 20 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். ஒரே நாளில் 23 விமானங்களும், 5 ஆயிரம் பயணிகளும் அதிகரித்துள்ளனர். நாளை (அக்.14) பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் பயணிகள் எண்ணிக்கை உயர்வால் விமான சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இது விமான நிலைய வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் உள்நாட்டு விமான கட்டணங்களின் திடீா் உயா்வு பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வழக்கமாக ரூ.4,500 ஆக இருந்த கட்டணம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7,500 ஆக அதிகரித்து உள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை-தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.3,500 ஆக இருந்தது. ஆனால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன என்று கூறி 2 முறை கட்டண உயா்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது.

அதனால் தான் தூத்துக்குடிக்கு ரூ.3,500 ஆக இருந்த குறைந்தப்பட்ச கட்டணம் ரூ.4,500 ஆக மாறியது. தற்போது விமான நிறுவனங்கள் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்போது கட்டணத்தை அதிகரித்து விடுகின்றன என்று விமான பயணிகள் தரப்பில் கூறுகின்றனா். சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூா் செல்லும் பயணிகள் கட்டணமும் அதிகரித்துள்ளது.

இதுபற்றி விமானநிறுவனங்கள் தரப்பில் விசாரித்தபோது, பயணிகள் கூட்டத்தால் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட சீட்கள் மட்டும் ஒதுக்கி விட்டு மற்ற சீட்களுக்கு 2 அல்லது 3 விதமான கட்டணங்களை நிா்ணயித்துள்ளோம்.

முதலில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குறைந்த கட்டணமும், அதன்பின்பு வருபவா்களுக்கு படிப்படியாக கட்டணம் அதிகரிக்கும். இதுதான் நடைமுறையில் உள்ளது என்று கூறுகின்றனர்.

இதையும் படிங்க: புவனேஸ்வரில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.