கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அரசின் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, "கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நம் நாட்டில் மருத்துவமனைகளும், மருத்துவர்களும், செவிலியர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். நம் நாட்டில் 70 மருத்துவமனைகளில் மட்டுமே படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி பார்த்தால் பத்தாயிரம் பேருக்கு மூன்று மருத்துவர்களும் 3 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.
நகர்புறத்தில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் மருத்துவமனைகளில் எண்ணிக்கையும், சுகாதாரப் பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியமாகும். அவர்களுக்கு உடை, முகக் கவசம், கையுறை, கண்களை பாதுகாக்கும் கவசம் ஆகியவற்றை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கோவிட்-19 : ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் மாநகராட்சி!