சென்னை வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, திருவண்ணாமலை எம்எல்ஏ எ.வ வேலு, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி, அண்ணா நகர் சட்டப்பேரவை வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ஜீ ஸ்கொயர் பங்குதாரர் பாலா ஆகியோரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த சோதனையின்போது, ஐம்பதுக்கும் மேற்பட்ட திமுகவினர் வீட்டை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் வருமானவரித்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சோதனை முடிவடைந்த பிறகே வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா அல்லது பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிவிக்கப்படும் என வருமானவரித்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : 'தமிழ்நாடு முக்கியத்துவம் பெற பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிபெற வேண்டும்!'