சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கௌசிபி(26). இவரது கணவர் ரதி டெக்ஸ்டைல் என்ற ஜவுளிக் கடையில் பணிபுரிந்து வருவதாக தெரிகிறது.
நான்கு மாத கர்ப்பிணியான இவர், மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்துக்கொண்டு கணவர் பணிபுரியும் கடைக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது பின்னால் வந்த கார் ஒன்று மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய காரில் பயணம் செய்த பெண் தப்பிச் சென்றுள்ளார்.
விபத்து குறித்து விசாரித்ததில் விபத்தை ஏற்படுத்திய கார் வருமான வரித்துறை அலுவலர் ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரிகிறது.
பின்னர் சம்பவ இடம் விரைந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு காவலர்கள் மற்றும் ராஜமங்கலம் காவலர்கள் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டிப்பர் லாரி மோதல்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பெண்!