ETV Bharat / state

3ஆவது அலை முன்னெச்சரிகை நடவடிக்கை - குழந்தைகள் நலப்பிரிவு தொடக்கம் - HEALTH MINISTER

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட பணிகளைத் தொடங்கிவைத்தார்.

3 ஆவது அலை முன்னெச்சரிகை நடவடிக்கை - குழந்தைகள் நலப்பிரிவு தொடக்கம்

author img

By

Published : Jul 2, 2021, 8:20 AM IST

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று (ஜூலை 1) நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று 40 ஆக்ஸிஜன் படுக்கைகள், 100 சாதாரண படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு வார்டை திறந்துவைத்தார்.

தொடர்ந்து 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி, பொதுமக்களுக்கான கழிவறைகளையும் திறந்துவைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், "முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் ஏற்கனவே ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 140 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் கரோனா சிகிச்சைக்காக 80 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படுக்கை வசதிகளை ஆறு மாதத்திற்கு அப்படியே வைத்திருக்க உள்ளோம்.

தற்போது கரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மற்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஸ்டான்லி மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேலும் செய்து தரப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க; ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.