வடசென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சித்த முறையில் சிகிச்சை பெற்று வந்த 25 நபர்கள் பூரண குணமடைந்திருந்தனர். இதனையடுத்து இவர்களை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் பழங்கள், கபசுர குடிநீர் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கு காலம் முடிவதற்குள் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் கரோனா சமூக பரவல் இல்லாத சூழலில், எதிர்க்கட்சிகள் சமூக பரவலாக அறிவிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். சித்த மருத்துவத்தை அலோபதி மருத்துவத்திற்கு இணையாக இன்னும் சில நாள்களில் செய்யப்படும். சித்தா கேர் சென்டர்கள் தமிழ்நாடு முழுவதும் விரைவில் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சரின் மருத்துவக் குழுவின் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அப்போது அறிவிக்கப்படும்.
தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் வாங்குவது தவறு மீறி பெற்றோர்களை கஷ்டப்படுத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க...மக்களின் மரணத்தை மறைத்த முதலமைச்சர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் - ஸ்டாலின்