கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 5441 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,20,827 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 12,863 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
நோய்த்தொற்றிற்காக சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 1890 நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றிலிருந்து 8,74,305 நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பாளர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை- ஹர்ஷ் வர்தன்