ETV Bharat / state

ரேஷன் பொருட்கள் கடத்தல் - மார்ச்சில் மட்டும் ரூ.1.06 கோடி மதிப்புள்ள பொது விநியோகப் பொருட்கள் பறிமுதல்! - ரேஷன் பொருட்கள் பறிமுதல்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, சுமார் ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொது விநியோகத் திட்டப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

seize
ரேஷன்
author img

By

Published : Apr 25, 2023, 4:47 PM IST

சென்னை: தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இன்று(ஏப்.25) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம், சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.

அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணிகளை மேற்கொண்டு, அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் மற்றும் உடந்தையாக செயல்படுவோர் மீதும், இன்றியமையாப் பண்டங்கள் சட்டம், 1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980-ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ஒரு கோடியே ஆறு லட்சத்து 20 ஆயிரத்து 66 ரூபாய் மதிப்புள்ள 3,350 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 186 எரிவாயு உருளைகள், 250 கிலோ கோதுமை, 45 கிலோ துவரம்பருப்பு, மண்ணெண்ணெய் 380 லிட்டர், 8 பாமாயில் பாக்கெட்டுகள் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 174 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 546 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1980-ன் கீழ் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நேற்று திருமணத்தில் மது பரிமாறும் அனுமதி வாபஸ் - இன்று 500 டாஸ்மாக்கிற்கு மூடுவிழா பணிகள் துவக்கம்!

இதையும் படிங்க: பச்ச உடம்புக்காரி பார்த்து நடக்கச்சொல்லுங்க - கைக்குழந்தையை தூக்கி வைத்து பெண்ணுக்கு உதவிய காவலர்

இதையும் படிங்க: Out of the Box Thinking: சென்னை ஐஐடியில் இலவசமாக படிக்க, விண்ணப்பிக்க ரெடியா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.