ETV Bharat / state

விரைவில் உள்ளிருப்புப் போராட்டம் - காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை பேட்டி

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ், உள்ளிருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 27, 2023, 6:20 PM IST

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து பேரவையில் பங்கேற்றனர்.

சட்டப்பேரவையில் ’நேரமில்லா நேரத்தில்’ காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, தங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாகப் பேசினார்.

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றத்தின் முடிவுகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிப்பது சரியாக இருக்காது என தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு தெரிவித்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, ''ஜனநாயக படுகொலையை மோடியும், பாஜக அரசும் அரங்கேற்றி இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் அசாதாரண சூழ்நிலையினைக் கொண்டு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தோம்.

அதை பேரவைத் தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது வருத்தம் அளிக்கிறது. அதனால் வெளிநடப்பு செய்து இருக்கிறோம். மோடியையும் பாஜகவையும் கண்டித்து இன்று கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறோம். வெளிநடப்பு செய்திருக்கிறோம். மேலும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த இருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக தமிழக சட்டசபையில், ராகுல் காந்தியை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து, தமிழக சட்டமன்றத்திற்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒரே பேருந்தில் பயணம் செய்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர்.

அனைவரும் கருப்பு உடை அணிந்து ராகுல் காந்திக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்ற பதாகைகளை ஏந்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் குழுவாக சட்டமன்றத்திற்கு வந்தனர். மேலும் முன்னதாக, 'மோடியே, பிஜேபியே, ஜனநாயகப் படுகொலையை செய்யாதே, அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்காதே, வன்மையாகக் கண்டிக்கிறோம்’ போன்ற கண்டன கோஷங்களையும் எழுப்பியவாறு சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். மேலும், 'ராகுல் காந்தியின் பின்னால் நிற்போம், ஜனநாயகத்தின் மீது தாக்குதல்' உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "முதல் பேருந்தை தாமதமாக இயக்கினால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை" -அமைச்சர் வார்னிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.