ETV Bharat / state

சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளருக்கு பிடிவாரண்ட்... உயர் நீதிமன்றம் உத்தரவு... - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு, ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

contempt of court case  Chennai High Court issues bailable arrest warrant against CMDA chairman  CMDA chairman contempt of court case  CMDA chairman  bailable arrest warrant against CMDA chairman  Chennai High Court  சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளருக்கு பிடிவாரண்ட்  சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  சென்னை உயர் நீதி மன்றம்
சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளருக்கு பிடிவாரண்ட்
author img

By

Published : Mar 16, 2022, 7:19 AM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தை, சர்வதேச தரத்துக்கு விரிவாக்கம் செய்வதற்காக விமான நிலையத்தின் அருகில் உள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தாரப்பாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதி நிலங்களை, நிறுவன ரீதியான பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், நிலத்தை கையகப்படுத்தும் முடிவை கைவிடுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து, தாரப்பாக்கம் பகுதியை மீண்டும் குடியிருப்பு பகுதியாக அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், கிரீஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடர்பாக தொழில்நுட்பக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 4 மாதங்களுக்குள் தகுந்த முடிவை அறிவிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ.) கடந்த 2020ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தாததால், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ராவை நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று (மார்ச் 15) விசாரணைக்கு வந்தபோது, அன்சுல் மிஸ்ரா ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: 'ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை..முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்சி' - எஸ்.பி. வேலுமணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.