சுதாகரன் விடுதலை
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்துவரும் சுதாகரன் இன்று (அக். 16) விடுதலையாகிறார்.
![சுதாகரன் விடுதலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13368192_5.jpg)
பள்ளிகளுக்கு விடுமுறை
இன்று (அக். 16) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
![பள்ளிகளுக்கு விடுமுறை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13368192_1.jpg)
ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்வாரா?
அதிமுக பொன்விழாவையொட்டி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதிக்கு இன்று (அக். 16) சசிகலா செல்வார் எனக் கூறப்படுகிறது.
![ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்வாரா?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13368192_4.jpg)
காங்கிரஸ் குழுக் கூட்டம்
டெல்லியில் காங்கிரஸ் குழுக் கூட்டம் இன்று (அக். 16) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அரசியல் நிலவரம், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ஐயப்பன் கோயில் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது.
ஓடுபாதை மறுசீரமைப்புப் பணி
ஓடுபாதை மறுசீரமைப்புப் பணி காரணமாக இன்றுமுதல் (அக். 16) இரு வாரங்கள் புனே விமான நிலையம் மூடப்படுகின்றது.
![ஓடுபாதை மறுசீரமைப்பு பணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13368192_2.jpg)