ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 விற்பனை
அக்டோபர் 15ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 (apple Watch Series 7) விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வாட்ச் சீரிஸ் 7-க்கு அதிகாரப்பூர்வமாக கேஷ்பேக் சலுகைகளை அறிவித்திருக்கிறது.
![ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 விற்பனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13360320_a.jpeg)
நீர் திறக்க உத்தரவு
மஞ்சளாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக அக்டோபர் 15ஆம் தேதிமுதல் நீர் திறக்க பொதுப்பணித் துறையின் பொறுப்பை கவனிக்கும் அரசின் கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
![நீர் திறக்க உத்தரவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13360320_b.jpeg)
புதிய சுற்றுலா விசா
அக்டோபர் 15ஆம் தேதிமுதல் இந்தியாவுக்கு வர விரும்பும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குப் புதிய சுற்றுலா விசா வழங்குவதை மீண்டும் தொடங்குவதாக உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
![புதிய சுற்றுலா விசா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13360320_c.jpg)
கரோனா தடுப்பு மருந்து
இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜைகோவ்-டி கரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான பணிகள் இன்றுமுதல் (அக். 15) வரும் 20ஆம் தேதிக்குள் தொடங்கப்படும் என நோய்த் தடுப்பிற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தெரிவித்துள்ளது.
![கரோனா தடுப்பு மருந்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13360320_d.jpg)
ராஷ்மி ராக்கெட் படம் வெளியீடு
நடிகை டாப்ஸி நடித்துள்ள ’ராஷ்மி ராக்கெட்’ திரைப்படம் இன்று (அக். 15) ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
![ராஷ்மி ராக்கெட் படம் வெளியீடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13360320_e.jpeg)