சென்னை : அரசு பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சொத்து, கடன் குறித்த தகவல்களை உரிய காலத்தில் சமர்பிக்க வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகளின்படி ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களின் சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையை உரிய காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் துறைசார்ந்த பணியாளர்கள் அனைவரும் தங்கள் சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையை உரிய காலத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 'தமிழ்நாடு மாநில மகளிர் புதிய கொள்கை’ - புதிய குழு அமைத்து அரசாணை