சென்னை: வக்ஃப் சட்டம் 1995 பிரிவு, 54 மற்றும் பொது வளாகங்கள் சட்டம், 1995 ஆகியவற்றின் கீழ் வக்ஃப் சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது 14 லட்சம் சதுர அடியிலான ரூ.15800 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிநபர்கள் வக்ஃப் வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் தராமல் சொத்துக்களை சட்டவிரோதமாக விற்பனை மற்றும் பரிவர்த்தனை செய்வதை தடுத்திட, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தால் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவு சட்டம், 1908 பிரிவின் 22ன்படி ஆட்சேபனை கடிதங்கள் வழங்கப்பட்டு வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நாகூர் தர்காவை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைத்த வக்ஃப் வாரியம்