ETV Bharat / state

இமான் அண்ணாச்சியின் சகோதரர் வங்கி கணக்கில் ரூ.1.60 லட்சம் திருட்டு! - Chennai crime

நடிகர் இமான் அண்ணாச்சியின் சகோதரர் வங்கி கணக்கில் இருந்து 1.60 லட்சம் ரூபாயை நூதன முறையில் திருடிய மர்ம கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இமான் அண்ணாச்சியின் சகோதரர் வங்கி கணக்கில் ரூ.1.60 லட்சம் திருட்டு!

author img

By

Published : Feb 24, 2023, 10:38 AM IST

சென்னை: அரும்பாக்கத்தில் உள்ள பாலாம்பாள் தெருவில் செல்வகுமார் (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சியின் சகோதரர் ஆவார். இவரும் பல்வேறு திரைப்படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், செல்வகுமார் அண்ணா நகர் சைபர் கிரைம் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், ‘எனது செல்போனிற்கு வந்த குறுந்தகவலில், எனது வங்கி கிரெடிட் கார்டில் கூடுதல் பாயிண்ட்டுகள் இருப்பதாகவும், அதனை கிளிக் செய்தால் 10,000 ரூபாய் பணம் கிடைக்கும் என்றும், அதற்கு இன்றே கடைசி நாள் என்றும் இருந்தது. எனவே நான் அந்த ஆப்பை கிளிக் செய்தேன். அப்போது உள்ளே சென்ற நிலையில், அதில் கேட்கப்பட்ட எனது வங்கி விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்தேன்.

ஆனால், அடுத்த சிறிது நேரத்தில் எனது கிரெடிட் கார்டு மற்றும் மகள்களின் வங்கிக் கணக்கில் இருந்து 1.64 லட்சம் ரூபாய் பணத்தை 3 தவணையாக மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். பணம் திருடப்பட்டதை உணர்ந்த நான், உடனடியாக இது குறித்து வங்கி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் உடனடியாக பணத்தை மேலும் எடுக்காத வகையில் தடுத்து நிறுத்தினர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் தான் கணக்கு வைத்துள்ள வங்கியின் லோகோவைபோல் வைத்து நூதன முறையில் பணத்தை பறித்ததாகவும் செல்வகுமார் புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த புகாரின் பேரில் அண்ணா நகர் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, நூதன முறையில் பணத்தைத் திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதுக்கோட்டை அருகே ரூ.28 லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.