ETV Bharat / state

புத்தாண்டு வரை தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - கனமழை

IMD: வருகிற டிச.31, ஜன.1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IMD
கனமழை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 4:30 PM IST

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வருகிற 30ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், டிச.31ஆம் தேதி அன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதேபோல் ஜன.1ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

வடகிழக்கு பருவமழை: கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவானது ஊத்து (திருநெல்வேலி) 5 செ.மீ, நாலுமுக்கு (திருநெல்வேலி) 4 செ.மீ மழையும், காக்காச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) தலா 3 செ.மீ மழையும், பாம்பன் (ராமநாதபுரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) தலா 2 செ.மீ மழையும், மண்டபம் (ராமநாதபுரம்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) தலா 1செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: வருகிற 30ஆம் தேதி அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அங்கித் திவாரி விவகாரம்; தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.