ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவால் விபரீதம் - பெண் குத்திக் கொலை - puthu perungalathur women murder

சென்னை: புது பெருங்களத்தூர் பகுதியில் தையல் கடை வைத்திருந்த பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

murder
murder
author img

By

Published : Jun 9, 2020, 7:33 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் யசோதா ராணி (42). இவர் அதே பகுதியில் தையல் கடை நடத்திவருகிறார்.

இன்று மதியம் ஒரு மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவரிடம், யசோதா ராணி நீண்ட நேரமாக கோபமாகப் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யசோதா ராணியின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 108 வாகனத்தில் வந்த ஊழியர்கள் யசோதாராணியை பரிசோதித்துவிட்டு, ஏற்கனவே அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பீர்க்கன்கரணை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், விரைந்து வந்த காவலர்கள், யசோதா ராணியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து காவலர்களின் விசாரணையில், யசோதாவை கொலை செய்த நபர் சேலையூரைச் சேர்ந்த செல்வகுமார் (42) என தெரியவந்தது. செல்வகுமாருக்கும் யசோதா ராணிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

செல்வகுமார் யசோதா ராணியை வெளியே செல்லலாம் என அழைத்துள்ளார். ஆனால் யசோதா ராணி ”எனக்கு வேலை இருக்கிறது நான் வர முடியாது” என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார், யசோதா ராணியை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து செல்வகுமாரை கைதுசெய்வதற்கான பணியில் பீர்க்கங்கரணை காவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கை துண்டிக்கப்பட்டு சுடுகாட்டில் கிடந்த உடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.