ETV Bharat / state

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? - எல்லாம் சசிகலாவிற்கு தெரியும் - இளவரசி

author img

By

Published : Mar 21, 2022, 2:28 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து சசிகலாவிற்கு தெரியும் என இளவரசி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

75 நாளில் ஓரிரு முறை மட்டுமே.. மன உளைச்சலில் இருந்தா ஜெயலலிதா.. எல்லாம் சசிகலாவிற்குத் தெரியும் - இளவரசி

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்து அமைக்கப்பட்டுள்ள ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் இன்று (மார்ச்.21) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

இதில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இளவரசி அளித்த வாக்குமூலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில், சசிகலா மூலமாக கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் அறிமுகம் ஏற்பட்டது.

போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் தங்கி இருந்தாலும், என்னிடம் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எதுவும் பகிர்ந்தது இல்லை. ஆனால் வீடு, குடும்பம் தொடர்பாக மட்டும் பேசுவார். கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் சிறைக்கு சென்றேன். அப்போது அவர் உடல் நலக் குறைவாகவும் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில்  இளவரசி
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இளவரசி

2016 தேர்தலின் போதும் உடல் நலகுறைவாக இருந்தார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது சசிகலா மட்டுமே உடன் இருந்து பார்த்துக் கொண்டார். நான் தினமும் சென்று பார்த்து வருவேன். 75 நாளில் ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவைப் பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாகத் தான் பார்த்திருக்கிறேன். என்ன வகையான சிகிச்சை வழங்கப்பட்டது என்பது எல்லாம் சசிகலாவிற்குத் தெரியும் என இளவரசி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பிரசித்திபெற்ற கோயில்களில் சசிகலா வழிபாடு - முழுப்பின்னணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.