சென்னை: சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு மீண்டும் காட்டப்படுவதாக பேராசிரியர் பணியை ராஜினாமா செய்து, பின்னர் தற்போது பணிக்கு வந்த கேரளாவைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் விபின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னை ஐஐடியில் நடைபெறும் சாதியப் பாகுபாடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் ஏற்கெனவே புகார் அளித்திருக்கிறார்.
வி.ஆர்.முரளிதரன் தான் காரணம்
இந்நிலையில், ஐஐடி நிர்வாக குழுவில் செனட் சார்பில் நியமிக்கப்படும் உறுப்பினராகப் பேராசிரியர் வி.ஆர். முரளிதரன் என்பவர் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், ஐஐடி சென்னையில் சாதியப் பாகுபாடுகளுக்கான முக்கிய காரணம் இவர்தான் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தான் கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கிய குற்றவாளியான இவரை, அந்த பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும் எனவும் உதவிப் பேராசிரியர் விபின் கூறியுள்ளார்.
சாதி ரீதியான பாகுபாட்டால் ஆபத்து
சாதி ரீதியான பாகுபாட்டிற்கு காரணமான நபர் நிர்வாக குழுவில் இடம் பெற்றுள்ளதால் தான் கொடுத்த புகார்கள் முறையாக விசாரிக்கப்படாது என தெரிவித்துள்ள விபின், பேராசிரியர் வி.ஆர். முரளிதரனை நிர்வாகக் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேவைப்பட்டால் தான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதாகவும் விபின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு: ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்!