ETV Bharat / state

மின்சார வாகனங்களின் பிரேக் செயல்திறனை மேம்படுத்தும் வியூகங்கள் - ஐஐடி மெட்ராஸ் ஆய்வு! - ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங்

சென்னை: மின்சார வாகனங்களின் பிரேக் செயல்திறனை மேம்படுத்தும் வியூகங்கள் குறித்து ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங்
ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங்
author img

By

Published : Feb 8, 2021, 10:05 PM IST

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், மின்சார வாகனங்களின் பிரேக்கிங் செயல்திறனை மேம்படுத்தும் வியூகங்களை குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்தப் புதிய வியூகமான ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங் (Regenerative Braking) மூலம் வாகனம் நிறுத்தும் தூரத்தை மேம்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

ஐ.ஐ.டி மெட்ராஸ் பேராசிரியர் சி.எஸ்.சங்கர் ராம் தலைமையிலான மாணவர்கள் குழுவினர், ஃப்ரிக்ஷன் பிரேக், ரிஜெனரேட்டிவ் பிரேக் ஆகியவற்றின் யுத்திகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவுகள், வெகிக்கில் சிஸ்டம் டைனமிக்ஸ் (Journal Vehicle System Dynamics) இதழில் வெளியிடப்பட்டிருந்தது.

பிரிக்ஷன் பிரேக்கிங் சிஸ்டம் (Friction Braking System): இந்த சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ள வாகனத்தை ஓட்டுநர் நிறுத்துகையில், எரிபொருளானது வெப்ப ஆற்றலாக வீணாகுகிறது. அதே சமயம், ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் (Regenerative Braking System) பொருத்தப்பட்ட மின்சார வாகனங்களில், ஓட்டுநர் வாகனத்தை நிறுத்துகையில், எரிபொருளின் வெப்ப ஆற்றல் மின் ஆற்றலாக மாறி, பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம், அது வாகனத்தின் தொடர் ஓட்டத்திற்கு பயன்படுத்த உதவியாக மாறுகிறது.

ஃப்ரிக்ஷன் பிரேக்கிங்கில் வீணாகும் எரிபொருளை, மின்சார வாகனங்களில் புதிய பிரேக்கிங் சிஸ்டம் மூலம் சேமிக்கும் வசதியை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். வாகனங்களில் இரண்டு வகையான பிரேக் சிஸ்டத்தையும் பொருத்துகையில், பிரேக் பிடிக்கும் போது வாகனம் நிறுத்தும் தூரம் குறைவது மட்டுமின்றி எவ்விதமான அதிர்வுகளையும் காரில் உள்ளவர்கள் உணரமாட்டார்கள். சோதனை செய்ததில், இரண்டு பிரேக் சிஸ்டம்களை கொண்டுள்ள கார்கள் நிறுத்தும் தூரம் 2.1 மீட்டர் குறைகிறது எனக் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கையில், புதிய ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்தின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 'ஐ லவ் யூ, கல்யாணம் பண்ணிக்கலாமா' - 'அலெக்ஸா'விடம் தினமும் கேட்கும் இந்தியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.