ETV Bharat / state

போர் வாகனத்தின் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் பாதுகாப்புத்துறையுடன் கைகோர்த்த சென்னை ஐஐடி - High Power CW Laser Sources

ஐஐடி மெட்ராஸ், டிஆர்டிஓ உடன் இணைந்து பாதுகாப்புத் தேவைகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மையத்தை இயக்கி வருகிறது.

டிஆர்டிஓ உடன் கைகோர்த்த ஐஐடி மெட்ராஸ்
டிஆர்டிஓ உடன் கைகோர்த்த ஐஐடி மெட்ராஸ்
author img

By

Published : Jan 2, 2023, 7:23 PM IST

டிஆர்டிஓ உடன் கைகோர்த்த ஐஐடி மெட்ராஸ்
மேம்பட்ட போர் வாகனத் தொழில்நுட்பங்கள்

சென்னை: ஐஐடி மெட்ராஸ் (IIT Madras), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (Defence Research and Development Organisation - DRDO) இணைந்து நாட்டின் தற்காப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு மேம்பட்ட தொழில் நுட்பங்களை உருவாக்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆராய்ச்சி மையத்தை இயக்கி வருகிறது.

டிஆர்டிஓ-வால் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தை சென்னை ஐஐடி கையகப்படுத்தி, இடைநிலை ஆராய்ச்சிக் குழுவினரைக் கொண்ட 'உயர் சிறப்பு மையமாக' (Centre of Excellence) மாற்றியுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களுக்கு பயனளிக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். டிஆர்டிஓ தொழில் கல்வி- ராமானுஜன் உயர்சிறப்பு மையம் (DRDO Industry Academia- Ramanujan Centre of Excellence - DIA-RCoE) என்று இந்த மையம் அழைக்கப்படுகிறது.

பாதுகாப்புக்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களில் இலக்கை நோக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன் அதிநவீனத் தொழில்நுட்பங்களைக் கண்டறியக் கூடிய உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டு உள்ளது. அத்துடன், பாதுகாப்புத் துறையில் 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தில் மிகப் பெரிய பங்களிப்பையும் இந்த மையம் வழங்கும்.

டிஆர்டிஓ உடன் கைகோர்த்த ஐஐடி மெட்ராஸ்
மின்னணு மற்றும் கணினி அமைப்புகள்

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறும்போது, “கல்வித்துறை, தொழில் துறை, டிஆர்டிஓ ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நாட்டின் முக்கிய தேவைகளுக்காக ஆத்மநிர்பார் தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பணியில் இது ஒரு மைல் கல்லாக விளங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் போன்றவையும் பங்கேற்கும் வாய்ப்பு முதன்முறையாக அளிக்கப்பட்டு உள்ளது.

டிஆர்டிஓ உடன் கைகோர்த்த ஐஐடி மெட்ராஸ்
கடற்படை சாதனங்கள் மற்றும் கடற்படைத் தொழில்நுட்பங்கள்

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நீண்டகால இலக்கை நோக்கிய ஆராய்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் நிறுவப்பட்டு உள்ள இந்த மையம், பின்வரும் ஆராய்ச்சிப் பணிகளில் பல்துறை சார்ந்த இலக்கு நோக்கிய அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளும்” என்றார்.

  • மின்னணு மற்றும் கணினி அமைப்புகள் (Electronics and Computational Systems)
  • கடற்படை சாதனங்கள் மற்றும் கடற்படைத் தொழில்நுட்பங்கள் (Naval Systems and Naval Technologies)
    டிஆர்டிஓ உடன் கைகோர்த்த ஐஐடி மெட்ராஸ்
    உயர்சக்தி சிடபிள்யூ லேசர்கள்
  • மேம்பட்ட போர் வாகனத் தொழில்நுட்பங்கள் (Advanced Combat Vehicle Technologies)
  • உயர்சக்தி சிடபிள்யூ லேசர்கள் (High Power CW Laser Sources)
  • அடுத்த தலைமுறை தகவல்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பங்கள் (Next-generation communication and networking technologies)

இதனைத்தொடர்ந்து சென்னை ஐஐடி டீன் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) மனு சந்தானம் கூறும்போது, “திறன் மேம்பாட்டிற்கும், டிஆர்டிஓ உள்ளிட்ட அதிமுக்கிய தொழில்நுட்பம் தேவைப்படும் இடங்களில் பயிற்சி பெற்ற மனிதவளத்தை உருவாக்கவும் உதவும். டிஆர்டிஓ-வுடன் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சியை எளிதாக்கவும், சாதனைகளை நிகழ்த்தவும் சென்னை ஐஐடி மற்றும் நாட்டின் பிற கல்வி நிறுவனங்களின் கல்வி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த மையம் ஒத்துழைப்பை வழங்கும்.

பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களில் இலக்கை நோக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்வதில் டிஆர்டிஓ தொழில் கல்வி- ராமானுஜன் உயர்சிறப்பு மையம் சிறந்து விளங்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் உலகிலேயே முதன்மையான இடத்தை எட்டப் பாடுபடும்” என்றார்.

டிஆர்டிஓ தொழில் கல்வி - ராமானுஜன் உயர்சிறப்பு மையத்தின் இயக்குநராக ஓ.ஆர். நந்தகோபன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடற்படைத் தொழில்நுட்பம், கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகம், கடற்படை அறிவியல், டிஆர்டிஓ-வின் தொழில்நுட்ப ஆய்வகம் ஆகியவற்றில் 35 ஆண்டுகால அனுபவம் உடையவர். விசாகப்பட்டினத்தில் உள்ள என்எஸ்டிஎல் நிறுவனத்தின் இயக்குநராகவும் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எலான் மஸ்க் சொந்த வாக்கெடுப்பில் - இத்தனை பேருக்கு விருப்பமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.