ஐஐடி மெட்ராஸில் செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜியுவிஐ நடத்திய ஜென் வகுப்புகள் மூலம் கிட்டத்தட்ட 1000 மாணவர்கள் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வகுப்பின் மூலம் மாணவர்களுக்கு கிளையன்ட் மற்றும் சர்வர் சாப்ட்வர்களை உருவாக்குவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும். கூடுதலாக, HTML மற்றும் CSSவும் கற்றுத்தரப்படுகிறது. ஜென் கிளாஸின் இணையும் மாணவர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் பாடம் கற்பிக்கப்படுவதால், நிறுவனங்கள் ஆர்வமுடன் பணியமர்த்துகின்றனர்.
இதுகுறித்து பேசிய GUVI இன் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அலுவலருமான எஸ்.பி.பாலமுருகன், “கடினமான நேரங்களை சமாளிக்க ஸ்மார்ட் திறன்தான் தேவை. ஆர்வமுள்ளவரகள் வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொண்டு வேலையைப் பெற நாங்கள் உதவுகிறோம்” என்றார்.
இந்த வகுப்பில் கல்லூரியை முடித்து வரும் மாணவர்களும், நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும் தங்களது திறனை மேம்படுத்தும் நோக்கிலும் கலந்துகொள்ளலாம். இவ்வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு நிச்சயமாக கேம்பஸ் பிளேஸ்மெண்ட் ஏற்படுத்தி தரப்படும் என GUVI குழுவினர் தெரிவிக்கின்றனர்.
பொறியியல் அல்லாத படிப்புகளை பயின்ற மாணவர்களும், இந்த வகுப்பில் கலந்துகொள்ளலாம் . ஜென் வகுப்புகள் மூன்று மாதம் வார நாள் மட்டும் அல்லது 6 மாதத்திற்கு வார இறுதி நாள்கள் மட்டும் என இரண்டு திட்டங்கள் உள்ளன. இதில், கூகுள், சைமென்டெக் மற்றும் ஹனிவெல் போன்றவற்றின் பின்னனியில் உள்ள தொழில்துறை வல்லுநர்களால் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஐடி துறையில் ஜாம்பவான வளம்வர ஜென் கிளாஸ் வகுப்பு முக்கிய பாலமாக அமைந்திடும். கரோனா காலத்தை கருத்தில் கொண்டு, இந்தாண்டு ஜென் வகுப்புகள் ஆன்லைன் நடத்தப்படுகின்றன.