ETV Bharat / state

சுற்றுச்சூழலுக்கு உகந்த 'பசுமை ஹைட்ரஜன்' - உருவாக்கும் பணியில் சென்னை ஐஐடி

சென்னை: ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் ஆய்வில் சென்னை ஐஐடி கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

ஐஐடி ஆய்வுக் குழு
ஐஐடி ஆய்வுக் குழு
author img

By

Published : Jun 25, 2020, 8:19 PM IST

மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல் உருவாக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருள்களின் அளவு மளமளவெனக் குறைந்துவரும் வேளையில், புதுப்பிக்கத்தக்க மற்றும் சுற்றுச்சுழலுக்குக் குந்தகம் விளைவிக்காத பசுமை ஆற்றலை உருவாக்குது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அந்த வகையில், ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் ஆய்வில் சென்னை ஐஐடி கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.

மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் 'ஸ்பார்க்' (Scheme for Promotion of Academic and Research Collaboration - SPARC) திட்டத்தின்கீழ் இந்த ஆய்வுக்காக 66 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி கல்லூரியின் உலோகப் பொறியியல் துறை பேராசிரியர் என்.வி. ரவி குமார், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கலோங் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கனிம வேதியியல் (Organic Chemistry) கல்லூரியின் தலைவரும் பேராசியருமான சஞ்சய் மாதூர் ஆகியோர் இந்த ஆய்வை தலைமையேற்று நடத்துகின்றனர்.

பேராசிரியர் சஞ்சய் மாதூர் ஐஐடியில் பகுதிநேர பேராசிரியராகவும் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய எம்.வி. ரவி குமார், "தண்ணீர், ஹைட்ரோகார்பனை வைத்து பாரம்பரிய முறையில் ஹைட்ரஜனை உருவாக்கும்போது, அதிகளவில் கரிம அமில வாயு வெளியாகிறது. இது நம் சுற்றுச்சூலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

ஹைடிரஜன் உருவாக்கம்
ஹைடிரஜன் உருவாக்கம்

அதேவேளையில், 'வாட்டர் எலக்ட்ரோலைசிஸ்' முறை மிகவும் தூய்மையானது. அதிக திறன் கொண்டது. இந்த ஆய்வின் மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதே எங்களது நோக்கமாகும்" என்றார்.

இதையும் படிங்க : புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்திய ஐஐடி ஆய்வாளர்கள்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.