ETV Bharat / state

சிறுநீரில் இருந்து காசநோய் தாக்கம் கண்டறிய முயற்சி.. சென்னை ஐஐடி புதிய ஒப்பந்தம்! - சென்னை

சென்னை ஐஐடி, சிறுநீர் மூலம் காசநோயை கண்டறியும் கருவியை உருவாக்க பொதுத்துறை நிறுவனமான ஜெனரல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உடன் இணைந்துள்ளது.

IIT Chennai involved in research to detect tuberculosis impact through urine
சிறுநீர் அடிப்படையில் காசநோய் தாக்கத்தை கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி
author img

By

Published : Feb 22, 2023, 4:12 PM IST

சென்னை ஐஐடி, பொதுத்துறை நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC Re)-வுடன் இணைந்து, சிறுநீர் அடிப்படையிலான காசநோய் கண்டறிதல் அல்லது பரிசோதனையை உருவாக்க உள்ளது. பல்வேறு நோய்களைக் கண்டறிய தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரத்த குளுக்கோஸ் மானிட்டர்கள் போன்ற கருவிகளைக் காட்டிலும், புதிதாக உருவாக்கப்பட உள்ள சிறுநீர் அடிப்படையிலான காசநோய் பரிசோதனைக் கருவி விரைவாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும்.

இத்திட்டத்தின் மூலம் மத்திய - மாநில அரசுகளின் சுகாதாரத் துறைகளும் முதன்மை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை சுகாதார மையங்களும் பயன்பெறும். இந்த கூட்டுமுயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) மகேஷ் பஞ்சக்நுலா மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC Re) இயக்குநரும் பொதுமேலாளருமான மதுலிகா பாஸ்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் 180-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து தற்போது வரை ரூ.250 கோடி திரட்டப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) மகேஷ் பஞ்சக்நுலா கூறும்போது, நாட்டின் மிகப் பரவலான தொற்றுநோய்களில் ஒன்றான காசநோய்க்கு 2025-ம் ஆண்டுக்குள் முற்றுப்புள்ளி வைக்க (End TB) இந்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

ஆனாலும் , கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இந்த முயற்சிகள் தடைபட்டுள்ளன. காசநோய் பரவாமல் கட்டுப்படுத்த அதனை சரியான நேரத்தில், விரைவான மற்றும் அணுகக் கூடிய முறையில் கண்டறிவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஜென்எக்ஸ்பர்ட் (GeneXpert), செல்வளர்ப்பு போன்ற தற்போதைய நுட்பங்களைப் பொருத்தவரை அவை வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பைக் கொண்டவை. தவிர கூடுதல் செலவு பிடிப்பதுடன், பரிசோதனைக்கு ஒருவாரமோ அல்லது இரு வாரங்களோ ஆகின்றன.

விரைவான, உணர்திறன் மிக்க இந்த பரிசோதனை முறையின் மூலம் சந்தேகத்திற்கு இடமான நோயாளிகளில் உண்மையாகவே பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்களை விரைவாகக் கண்டறிவதுடன் உரிய நேரத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளித்து நோயைக் கட்டுப்படுத்த முடியும். சென்னை ஐஐடி அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் ராகவேந்திர சாய் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.

புதுமையான பிளாஸ்மோனிக் ஃபைபர் ஆப்டிக் பயோசென்சார் (P-FA8) தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடியில் உள்ள பயோசென்சார்ஸ் ஆய்வகத்தில் உருவாக்கி வருகின்றனர். சிறுநீரில் உள்ள காசநோய் உயிரியலைக் கண்டறிவதற்கான ஆய்வக அளவிலான கருத்து ஆதாரத்தை அவர்கள் நிறுவியுள்ளனர்.

சிறுநீர் அடிப்படையில் காசநோயைக் கண்டறிய அடுத்தகட்ட நடவடிக்கையாக, காசநோய் பாதித்த நோயாளியின் மாதிரிகள் மூலம் P-FAB-ஐக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் முறையான மருத்துவ சரிபார்ப்பு ஆய்வில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHCs) இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் எளிதாக்குவது தான் ஆராய்ச்சித் திட்டத்தின் தற்போதைய முக்கியமான பணியாகும்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு 'வெடிகுண்டு மிரட்டல்' விடுத்த முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.