ETV Bharat / state

சென்னை ஐஐடியில் இதய நோய்க்கான ரத்தநாள ஆரோக்கியத்தை கண்டறிய புதிய கருவி கண்டுபிடிப்பு! - சுகாதாரத் தொழில்நுட்ப புத்தாக்க மையம்

சென்னை ஐஐடியின் ஆராய்ச்சியாளர்கள் இதய நோய்கான ரத்தநாள ஆரோக்கியத்தை கண்டறியவும், இதய நோய்களுக்கான ஆரம்ப கட்ட பரிசோதனையை வழங்குவதற்கும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 17, 2023, 8:20 PM IST

சென்னை ஐஐடியில் இதய நோய்க்கான ரத்தநாள ஆரோக்கியத்தை கண்டறிய புதிய கருவி கண்டுபிடிப்பு!!

சென்னை: ஐஐடி விஞ்ஞானிகள், ரத்த நாளங்களின் ஆரோக்கியம் மற்றும் வயதை மதிப்பீடு செய்வதற்கும், அதன் மூலம் இதய நோய்களுக்கான ஆரம்ப கட்ட பரிசோதனையை வழங்குவதற்கும், உடல் செல் - நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத புதுமையான சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

ஆர்ட்சென்ஸ் (ARTSENS®) என்று அழைக்கப்படும் இக்கருவி, நிபுணர்கள் அல்லாதவர்களும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு ரத்தநாள ஆரோக்கியத்தை மதிப்பிடவும் கணிக்கவும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

இமேஜிங் அல்லாத, கணினித் தளம் மூலம் இயக்கப்படும் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடியின் சுகாதாரத் தொழில்நுட்ப புத்தாக்க மையம் (HTIC) உருவாக்கியுள்ளது. இந்தக் கருவியைக் கொண்டு 5,000க்கும் மேற்பட்ட நபர்களிடம் பரிசோதனை செய்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவில் ஐந்து பயன்பாட்டுக் காப்புரிமைகளைப் பெற்றுள்ள இத்தொழில்நுட்பம், 10 வடிவமைப்புக் காப்புரிமைகளுடன், 28 காப்புரிமைகளைப் பெறுவதற்காக வெவ்வேறு அதிகார வரம்புகளில் காத்திருக்கிறது.

பல்வேறுகட்ட சோதனைக்குப் பிறகு தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் வணிகப்படுத்துதலுக்கு கருவி தயார் நிலையில் உள்ளது. ஆண்டொன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான ரத்தநாள சோதனை நடத்துவதற்கு இதனைப் பயன்படுத்த வேண்டும். சிகிச்சை மற்றும் நடைமுறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளபோதும், இதயம், ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் உலகம் முழுவதும் இறப்புக்கான முக்கிய காரணமாக நீடித்து வருகின்றன. எனவே, ஆரம்ப கட்டத்திலேயே கோளாறைக் கண்டறிந்து சரியான நேரத்தில் சரிசெய்வது அவசியமாகும்.

ஆர்ட்சென்ஸ்-ன் அம்சங்கள் குறித்து சென்னை ஐஐடியின் மின் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் ஜெயராஜ் ஜோசப் கூறும் போது, ’’ரத்தநாள ஆரோக்கியத்தின் நம்பகமான மதிப்பீட்டைக் கண்டறிய ரத்த நாளங்களின் சுவர்களில் நேரடியாக அளவிட வேண்டும். அதற்கு மாறாக தோலின் மேற்பரப்பில் அளவிடக் கூடாது.

நோய் மற்றும் முதுமை காரணமாக ரத்தநாளச் சுவரில் ஏற்படும் மூலக்கூறு மற்றும் புரதநிலை மாற்றங்களின் விளைவை எவ்விதத்திலும் ஊடுருவாத, துல்லியமான முறையில் நாங்கள் உருவாக்கியுள்ள ஆர்ட்சென்ஸ் கருவியைக் கொண்டு அளவிட முடியும்.

மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத அமைப்புகளான உடற்பயிற்சி மையம், சுகாதார மையம் போன்றவற்றிலும் கூட ஆர்ட்சென்ஸ் மூலம் பெருமளவிலான மக்களிடையே ரத்தநாளங்களின் முதிர்ச்சியை மதிப்பீடு செய்ய முடியும். இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள ஆர்ட்சென்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விரிவான மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

நெதர்லாந்தின் ராட்போட் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், இணைந்து பணியாற்றுபவருமான டிக் தைசேன் மருத்துவப் பயன்பாடு குறித்து கூறும்போது, ”600-க்கும் மேற்பட்ட நபர்களிடம் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சமீபத்தில் அதிநவீன ஆர்ட்சென்ஸ் கருவியைப் பயன்படுத்தியுள்ளோம். பயன்படுத்த எளிதாகவும், அதே நேரத்தில் ரத்தநாள முதிர்வை சரியாகப் புரிந்து கொள்ளவும் இக்கருவி உதவுகிறது. ரத்தநாள ஆரோக்கியத்தை மதிப்பிட உதவும் இதுபோன்ற எளிய சாதனங்களால், மருத்துவ நடைமுறையை மேம்படுத்தவும், பரந்த அளவில் ஏற்கச்செய்யவும் முடியும்’’ எனத் தெரிவித்தார்.

ஆர்ட்சென்ஸ் கருவி கையடக்கமாகவும், எளிதாகக் கையாளக் கூடியதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கிறது. நாங்கள் அறிந்த வரை, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கோ, பெரிய அளவிலான பரிசோதனைகளுக்கோ பயன்படுத்த இது மிகப் பொருத்தமான ஒன்றாகும்.

தமனிச் சுவரில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு மாற்றங்கள் காரணமாக உடலின் ரத்த நாளங்களில் நெகிழ்வுத் தன்மை, மென்மையை இழந்து கொழுப்புகள் சேர்வது இதய நோய்க்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். தமனி கடினமாகி, முன்கூட்டியே முதிர்ச்சியடையும்போது இதய செயல்பாட்டில் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதயநாள நோய்களுக்கு மைய ரத்த அழுத்தம் காரணமாகும்.

கையில் கட்டப்படும் இயந்திரம் மூலம் வழக்கமாக அளவீடு செய்யப்படும் புறவெளி ரத்த அழுத்தத்தை விட டோனோமீட்டர் மூலம் அளவிடப்படும் மைய ரத்த அழுத்தம் தான் இதய ஆரோக்கியத்தை மதிப்பிட பெரிதும் உதவுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தமனியின் கடினத்தன்மை, மைய ரத்த அழுத்தம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து அளவிடுவதற்கு நம்பகமான, வசதியான கருவிகள் இதுவரை இல்லாத நிலைமை இருந்து வந்தது. இப்பிரச்னைக்கு எச்டிஐசி ஐஐடிஎம் தற்போது தீர்வு கண்டுள்ளது.

பயன்படுத்துவது எப்படி?
ஆர்ட்சென்ஸ் ஒரே நேரத்தில் தமனியின் கடினத்தன்மை, மைய ரத்தஅழுத்தம் இரண்டையுமே சரி பார்க்கிறது. கையின் மேற்பகுதி, தொடைகளில் காப்பு போன்ற சாதனம் சுற்றுப்பட்டையாக பொருத்தப்படும், கரோடிட் தமனியைக் கண்டறிய கழுத்துப் பகுதியில் கம்பி போன்ற கருவி பயன்படுத்தப்படும். இதயநாள ஆரோக்கியத்தைக் குறிக்கும் முக்கிய அம்சங்களான கரோடிட் தமனியின் கடினத்தன்மை, பெருநாடித் துடிப்பின் அலைவேகம், மைய ரத்த அழுத்தம் ஆகிய மூன்றையும் இக்கருவி அளவிடுகிறது.

இக்கருவியின் புதிய தயாரிப்பான ARTSENS®Plus-ன் பயன்பாடு, துல்லியத்தன்மை, உள் இடை இயக்க மாறுபாடுகள் போன்றவற்றை 'ஜர்னல் ஆஃப் ஹைபர்டென்ஷன்' சமீபத்திய வெளியீட்டில், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளனர்.

ஆர்ட்டரி சொசைட்டியின் வழிகாட்டுதலின் படி, இக்கருவியின் செயல்பாட்டை சரி பார்க்க மருத்துவப் பரிசோதனைக்கு முந்தைய ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதயநாள கடினத்தன்மை, மைய ரத்த அழுத்தம் ஆகியவற்றின் எளிய முறையிலான, நம்பகமான மதிப்பீட்டை அவர்கள் மருத்துவத் தரத்துடன் துல்லியமாக நிரூபித்துள்ளனர். இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இக்கருவி தொடர்பான பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: 2023 - 24ஆம் ஆண்டில் அரசு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.5,337.18 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.