ETV Bharat / state

சென்னை ஐஐடியில் பி.எஸ் மருத்துவ அறிவியல் புதிய பாடப்பிரிவு துவக்கம்! - chennai news

ஐஐடியில் வரும் கல்வி ஆண்டு முதல் பிஎஸ் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற புதிய நான்காண்டு பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியுள்ளார்.

சென்னை ஐஐடியில் பி.எஸ் மருத்துவ அறிவியல் புதிய பாடப்பிரிவு துவக்கம்

author img

By

Published : May 11, 2023, 10:55 PM IST

சென்னை ஐஐடியில் பி.எஸ் மருத்துவ அறிவியல் புதிய பாடப்பிரிவு துவக்கம்

சென்னை: சென்னை ஐஐடியில் புதிதாக பி.எஸ் மெடிக்கல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் நான்கு ஆண்டு பட்டப் படிப்பும், பி.எச்.டி ப்ரோக்ராம் ஃபார் டாக்டர், எம்.எஸ்.பை ரிசர்ச் ஃபார் டாக்டர், எம்எஸ் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், பிஎச்டி ப்ரோக்ராம் ஃபார் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் கிராஜுவேட்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ”சென்னை ஐஐடியில் மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்திட்டத்தின் நான்கு ஆண்டு பி.எஸ் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளோம். வரும் கல்வி ஆண்டு முதல் இந்த படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு பி.டெக் படிப்பில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்தப் படிப்பானது நேரடியாக நடத்தப்படும். மருத்துவ மற்றும் பொறியியல் துறையில் இது போன்ற பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். சென்னை ஐஐடி மருத்துவம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை புதிதாக தொடங்கி உள்ளது. மருத்துவத் துறையை மேம்படுத்த தேவையான திறன்களுடன் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை தயார்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்தத் துறை தொடங்கப்பட்டு உள்ளது.

ஐ.ஐ.எஸ்.இ.ஆர் நடத்தும் ஆப்டிடியூட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்தப் படிப்பில் சேர பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயிர் காக்கும் மருத்துவ சாதனங்கள், மருந்து கண்டுபிடிப்பு மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு,

அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை மாணவர்கள் வடிவமைக்கும் வகையிலும் அவர்களை தயார் படுத்தும் வகையிலும் இந்த பாடத்திட்டம் வழங்கப்படுகிறது. மருத்துவ நடைமுறைகளில் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த ஏதுவாக மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது உடன் இந்தியாவில் மருத்துவ விஞ்ஞானிகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் பணியினை இந்தத் துறை மேற்கொள்ளும்.

இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மருத்துவத் துறையின் நிபுணர்கள் இந்தத் துறையின் பேராசிரியர்களாக இருப்பார்கள். மேலும் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. தொழில் நுட்பத்தை மருத்துவத்துடன் இணைக்க வேண்டும் என்பது கரோனா தொற்று காலத்தில் வெளிப்படையாகத் தெரிய வந்தது.

தீர்க்க முடியாமல் இருந்து வந்த மருத்துவப் பிரச்னைகளுக்கு அதிநவீன முறையில் தீர்வு காண மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒருங்கிணைப்பது தான் இலக்காகும். சிகிச்சை வாய்ப்புகளை மேம்படுத்தி சுகாதார பாதுகாப்பில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம் என்ற பணியைத் தொடர்வதன் மூலம் மருத்துவத் துறையில் உரிய பங்களிப்பை வழங்க விரும்புகிறோம்.

அதன் மூலம் நாம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தரமான குறைந்த செலவிலான மருத்துவ சேவையை வழங்க முடியும். மேலும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் பி.எஸ் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு பட்டப்படிப்பில் நேரடியாக சேர்ந்து படிக்கலாம். இதற்கு ஐ.ஐ.எஸ்.இ.ஆர் நடத்தும் ஆப்டிடியூட் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும்’’ எனத்தெரிவித்தார்.

அதேபோல், ’’எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்கள் எம்.டி.எம்.எஸ் படித்த மருத்துவர்களும் ஆராய்ச்சிப் படிப்புகளில் படிக்கலாம். மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைந்து படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மே மாதம் முழுவதும் இலவசமாக இதய அறுவை சிகிச்சை - தி.மலை அருணை மருத்துவக்கல்லூரி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.