ETV Bharat / state

ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி: புகார் தெரிவித்தவரின் வீட்டையே சீல் வைத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்! - Economic Offenses Unit

ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக, புகார் தெரிவித்தவரின் வீட்டையே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி: புகார் தெரிவித்தவரின் வீட்டையே சீல் வைத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!

author img

By

Published : Aug 6, 2022, 9:56 AM IST

சென்னை: வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இண்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் (ஐஎஃப்எஸ்) என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதனை லட்சுமி நாராயணன், வேத நாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்.

இந்நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 8,000 ரூபாய் தருவதாக கூறி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை வசூல் செய்துள்ளது. இவ்வாறு வசூல் செய்யும் நபர்களிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு, இரண்டு சதவீத வட்டிக்கு கடன் வாங்குவதாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

அடுத்தடுத்த புகார்கள்: மேலும் இந்த வசூல் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் பார்ப்பதாகவும், அந்த லாபத்தில் முதலீட்டாளர்களுக்கு பங்கு தருவதாகவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைத்து முதலீடு செய்தவர்களிடம் பணத்தை வசூல் செய்து இந்நிறுவனம் மோசடி செய்துள்ளது.

குறிப்பாக ஒரு லட்சம் ரூபாய்க்கு 8,000 ரூபாய் மாதந்தோறும் கிடைத்ததை அடுத்து, பலரும் அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்நிறுவனம் மோசடி செய்வது தொடர்பான புகார்கள் அதிகப்படியாக காவல் ஆணையர் அலுவலகத்தில் வந்ததால், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரை விசாரிக்க காவல் ஆணையர் பரிந்துரை செய்தார்.

ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி: புகார் தெரிவித்தவரின் வீட்டையே சீல் வைத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!

பல்வேறு ஆவணங்கள் பறிமுதல்: இதனால் தமிழ்நாடு முழுவதும் ஐஎஃப்எஸ் நிறுவனத்திற்கு தொடர்பான 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். முக்கியமாக இந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களுக்குச் சொந்தமாக உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, கோயம்புத்தூர் என மொத்தம் 21 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு நடைபெற்ற இந்த சோதனையில் 220 முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குடன் கூடிய 13 கம்பியூட்டர், 5 லேப்டாப், ஒரு டேப், 14 செல்போன்கள், 40 சவரன் தங்கம், ஒரு கார் மற்றும் 1.5 கோடி ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சீல் வைத்த போலீசார்: இதனிடையே புகார் அளித்த தன்னையே குற்றவாளியாக கருதி, தனது வீட்டை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை செய்து சீல் வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட சரவணகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சரவணகுமார், “கடந்த 2017ஆம் ஆண்டு மோகன் என்பவர் மூலமாக ஐஎஃப்எஸ் நிறுவனம் குறித்து தெரிய வந்தது.

1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதந்தோறும் 8,000 ரூபாய் வட்டி கிடைக்கும் என்பதை நம்பி பணத்தை முதலீடு செய்தேன். நாங்கள் முதலீடு செய்த பணத்தை டிரேடிங் மூலமாக பெற்று வருவதாக ஆவணங்களை காட்டி நம்ப வைத்தார்கள். மாதந்தோறும் சரியாக பணம் கொடுத்ததால், 1 கோடி ரூபாய் வரை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளேன்.

மேலும் 40,000 நபர்களை இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளேன். என்னால் பலரும் 1,000 கோடி ரூபாய் வரை ஐஎஃப்எஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இதேபோல் 10,000 கோடி வரை லட்சக்கணக்கானோர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அதுவரை சரியாக பணம் கொடுத்து வந்த இந்த நிறுவனம், கடந்த 23 ஆம் தேதி முதல் பணம் தருவதை நிறுத்தியது.

இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதனை விசாரித்த நீதிபதி, உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள எனது வீட்டை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனையிட்டு சீல் வைத்துச் சென்றுள்ளனர்.

புகார் அளித்த என் வீட்டையே பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனையிடுகின்றனர். என்னை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் பணத்தை இந்நிறுவனத்தில் செலுத்தி இருப்பதால், அவர்கள் என்னிடம் பணத்தை கேட்கின்றனர். எனவே உடனடியாக உரிமையாளர்கள் லட்சுமி நாராயணன், வேத நாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோரிடம் பணத்தை பெற்று கொடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

மேலும் இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள், பொருளாதார குற்றப்பிரிவின் ஈமெயில் ஐடியை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதேநேரம் ஆர்பிஐ அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்களில் மட்டுமே பொதுமக்கள் பணம் செலுத்த வேண்டும் எனவும் பொருளாதார குற்றப்பிரிவி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மோசடி: பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.