ETV Bharat / state

தேர்தலை புறக்கணிப்போம்: மெரினா கடற்கரை அனைத்து வியாபாரிகள் நல சங்கம் - மெரினா கடற்கரை கடைகள் அகற்றம்

சென்னை: தங்களுக்கு தேவையான கடைகளை தமிழ்நாடு அரசு ஒதுக்காவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக மெரினா கடற்கரை அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மெரினா கடற்கரை அனைத்து வியாபாரிகள் நல சங்க
marina sellers
author img

By

Published : Jan 23, 2021, 7:36 PM IST

சென்னை மாநகராட்சி உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மெரினா கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த 50 ஆண்டுகளாக மெரினா கடற்கரையில் செயல்பட்டுவந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

அங்கு 60 விழுக்காடு கடைகளுக்கு (540) மட்டுமே குலுக்கல் முறையில் கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 விழுக்காடு கடைகள் புதிய வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மெரினா கடற்கரை அனைத்து வியாபாரிகள் நல சங்க செயற்குழு உறுப்பினர் திருவேங்கடம், ’மெரினா கடற்கரையில் சுமார் 1,940 கடைகள் இருந்தன. தற்போது 900 கடைகளுக்கு மட்டுமே சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

அதிலும் 540 கடைகள் மட்டுமே பழைய வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குலுக்கல் முறையை ரத்து செய்து, எங்களுக்கு தேவையான கடைகளை உடனடியாக ஒதுக்கவேண்டும்.

எங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாவிட்டால், கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துவோம். சுமார் 30 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்களை ஒன்று திரட்டி, கடலில் இறங்கி போராடுவோம்.

மெரினா கடற்கரை அனைத்து வியாபாரிகள் நல சங்க செய்தியாளர்கள் சந்திப்பு

ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை திருப்பி அளித்துவிட்டு வரும் சட்டப்பேரவை தேர்தலை முற்றாக புறக்கணிப்போம்’ என்றார்.

இதையும் படிங்க:ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்போம்: மு.க. ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.