ETV Bharat / state

'சிலைக்கடத்தல் வழக்குகளில் முன்னேற்றம் இல்லை' - நீதிபதிகள் அதிருப்தி - madras high court judges expressed disappointment

சிலைக்கடத்தல் வழக்குகளில் ஒரு வழக்கு மட்டுமே முடிவுக்கு வந்துள்ளதாகவும், மற்ற வழக்குகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகள் அதிருப்தி
நீதிபதிகள் அதிருப்தி
author img

By

Published : Oct 1, 2021, 9:06 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சிலைக்கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகி உள்ளது குறித்து விசாரிக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு நேற்று (செப்.30) விசாரணைக்கு வந்தபோது, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், காணாமல் போனதாக கூறப்பட்ட 41 வழக்குகள் தொடர்பான ஆவணங்களில், 25 வழக்குகள் தொடர்பான ஆவணங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குகளை கைவிட்ட அலுவலர்களின் பெயர்கள் குறிப்பிட வேண்டும்

இந்த அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுதாரர் ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார். மேலும் அவர், ஆவணங்கள் மாயமானதாக கூறி வழக்குகளை கைவிட்ட அலுவலர்களின் பெயரை குறிப்பிட வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்கள் காவல் நிலையங்களில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும், ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் விசாரணை தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

நீதிபதிகள் அதிருப்தி

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், ஒரு வழக்கு மட்டும் முடிவுக்கு வந்துள்ளதாகவும், வேறு எந்த வழக்கிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் குறிப்பிட்டனர்.

16 வழக்குகளில் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படாதது குறித்தும் பல வழக்குகளில் சிலைகள் மீட்கப்படவில்லை என்றும் கடத்தப்பட்ட சிலைகளை மீட்கவும் குற்றவாளிகளை தண்டிக்கவும் தீவிரம் காட்டவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், காணமால் போன 16 வழக்குகளின் கோப்புகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்திய கர்ப்பிணி உயிரிழப்பு? - உறவினர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.