சென்னை கிழக்குத் தாம்பரம் மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட் (37). இவருடைய மனைவி சஞ்ஜுவ் லக்ஷ்மி (34). இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் 10 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராபார்ட் யாரும் தெரியாமல் அஸ்தினாபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவில் கணவரால் கைவிடப்பட்டு இருந்த தனலட்சுமி என்பவருடன் சுமார் ஐந்து வருடங்களாக தொடர்பு ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராபர்ட் தனலட்சுமி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தனலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் ராபர்ட் கடுமையான மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு (ஜனவரி 31) தனலட்சுமியின் வீட்டுக்குள் சென்ற ராபர்ட் இன்று காலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து சிட்லபாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ள சென்று பார்த்த போது ராபர்ட் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.