ETV Bharat / state

ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மனைவியை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த கணவர்! - Husband arrested

ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மனைவியை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 30, 2023, 9:19 AM IST

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவா (வயது 30). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூமாதேவி (வயது 26) சித்தாள் வேலை செய்து வருகிறார். இருவரும் கடத்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து ஸ்ரீ பெருபந்தூர் அடுத்த மணிமங்கலம் காந்தி நகரில் தங்கி வேலை செய்து வந்தனர்.

இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் படப்பை அடுத்த ஒரத்தூரை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் பணி செய்யும் சுந்தர் என்பவருடன் பூமாதேவிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் - மனைவி இருவருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கடந்த மூன்று மாதமாகத் தனித் தனியே பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் பூமாதேவி தனது ஆண் நண்பர் சுந்தரின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு படப்பை அருகே சென்றுள்ளார். இதனைக் கண்ட
பூமாதேவியின் கணவர் சிவா பின்தொடர்ந்து சென்று இருசக்கர வாகனத்தைக் கீழே தள்ளியுள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த பூமாதேவி பின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியுள்ளது.

இதனைக் கண்ட சுந்தர் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் ரத்த வெள்ளத்திலிருந்த பூமாதேவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து அறிந்த மணிமங்கலம் போலீசார் பூமாதேவி உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரது கணவர் சிவாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏஎஸ்பி பல்வீர் சிங் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. நெல்லையில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.