ETV Bharat / state

விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல் - hundred crore rupees worth heroin seized at chennai airport

சென்னை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 15. 6 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பொருள்கள் பறிமுதல்

author img

By

Published : May 7, 2021, 7:46 PM IST

Updated : May 8, 2021, 10:20 AM IST

கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவிலிருந்து கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம் இன்று சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது. அதில் பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாகவும், சா்வதேச போதை பொருள் கடத்தும் கும்பல் இதில் ஈடுப்பட்டுள்ளதாகவும் சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்கத்துறையினா் அந்த விமானத்தில் வந்திறங்கிய 113 பயணிகளையும் தீவிரமாக கண்காணித்தனா்.அப்போது தாண்சானியா நாட்டை சோ்ந்த டொபோரா இளையா(46) என்ற பெண் பயணி,அவருடன் வந்திருந்த பிலீக்ஸ் ஒபடியா(45) ஆகிய இருவா் மீதும் சந்தேகம் ஏற்பட்டது.அவா்கள் தாண்சானியா நாட்டிலிருந்து கத்தாா் நாட்டிற்கு வந்து,அங்கிருந்து சென்னை வந்துள்ளனர்.

நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பொருள்கள் பறிமுதல்
நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பொருள்கள் பறிமுதல்
அவா்கள் இருவரையும் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து அவா்கள் வைத்திருந்த டிராலி டைப் சூட்கேஸ்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில் ஹெராயின் போதைப்பவுடா் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இருவரின் சூட்கேஸ்களிலிருந்து மொத்தம் 15.6 கிலோ ஹெராயின் போதைப்பொருளை சுங்கத்துறையினா் கைப்பற்றினா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.100 கோடி.
ரூ.100 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல்

இதையடுத்து பெண் உட்பட இருவரையும் கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவா்கள் இருவரும் சா்வதேச போதை கடத்தும் கும்பலை சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது.

சென்னை விமானநிலையத்தில் ஒரே நேரத்தில் ரூ.100 கோடி மதிப்புடைய போதைப்பொருள் கைப்பற்றப்படது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற பெண் உள்பட இருவர் கைது: போலீஸ் விசாரணை!

Last Updated : May 8, 2021, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.