ETV Bharat / state

ஹார்ட் அட்டாக் ஏற்படுவதில் இருந்து காத்துக் கொள்வது எப்படி? நிபுணர்கள் கூறும் ஆலோசனை!

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

how-to-protect-from-heart-attack
how-to-protect-from-heart-attack
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 2:31 PM IST

Doctor Ashok kumar Interview

சென்னை: இதயநோய் பாதிப்புகளால் ஒவ்வோரு ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் உலக அளவில் இருப்பதாக உலக சுகாதர அமைப்ப்பின் தரவுகள் கூறுகின்றன. சமிப காலமாக பலரும் ஹார்ட் அட்டாக் மூலம் உயிரிழக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் பலருக்கும் இதை பற்றிய விழிப்புணர்வு இல்லை.

ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன் அறிகுறிகள் என்ன? உடற்பயிற்சியின் போது மாரடைப்பு வராமல் தடுக்க என்ன மாதிரியான வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து ஈடிவி பாரத் நிறுவனத்திற்கு இருதய நோய் சிறப்பு மருத்துவர் அசோக்குமார் சிறப்பு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது,

ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன் அறிகுறிகள் என்ன: "மாரடைப்பு அல்லது ஹார்ட் அட்டாக் என்பது இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்பு சேர்ந்து, பின்பு ரத்தம் உறைந்து குறிப்பிட்ட நாளில் ரத்தக்குழாய் வெடிப்பது தான் ஹார்ட் அட்டாக். ஹார்ட் வருவதற்கான அறிகுறியாக இருதயத்தின் மார்பு பகுதியில் அதிகளவில் அழுத்தம் அதாவது யானையின் கால் கொண்டு மிதிப்பது பாேல் வலி இருக்கும்.

இந்த வலியானது வலது புறத்தில் இருந்து இடது புறத்திர்கு பரவி,மயக்கம் வரலாம். அத்துடன் சேர்த்து மூச்சுதிணறலும் வரலாம் இது போன்ற அறிகுறிகள் இருக்கும் போது உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று இசிஜி எடுத்துக் கொண்டு, அதற்கான சிகிச்சை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது.

மேலும் இது பேண்ற வலிகள் ஏற்படும் போது முதல் ஒரு மணி நேரத்திற்குள் (golden hours ) சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது இருதயத்தின் பாதிப்பு குறைவாக இருக்கும். நேரம் ஆக,ஆக பாதிப்பும் அதிகரித்து உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்புகள் அதிகமாகும் எனவே மேலே குறிப்பிட்டுள்ளது போல அறிகுறிகள் தென்பட்டல் உடனடிய சிகிச்சை எடுப்பது கட்டாயமாகும்.

இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை : ஹார்ட் அட்டாக் குறித்து இளைஞர்கள் மத்தியில் பேசப்பட வேண்டும். இருதய நோய் வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளவை உயர் ரத்த அழுத்தம், புகைப்பிடித்தல், முறையற்ற உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, மன அழுத்தம் , தூக்கம் இண்மை போன்ற காரணங்களால் ஹார்ட் அட்டாக் காரணங்கள் ஆகும்.இது இளைஞர்களிடம் பேசப்பட வேண்டும். மூன்றில் ஒரு பகுதி இளைஞர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது.இளைஞர்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் ஹார்ட் அட்டாக் வருவதை குறைக்கலாம்.

குறிப்பாக இன்றைய நிலையில் அலுவலகங்கள் பலவற்றிலும் நீண்ட நேரத்திற்கு ஒரே இருக்கையில் ஒரே நிலையில் அமர்ந்து கொண்டு பலரும் வேலை செய்து வருகின்றனர். இவ்வாறு எந்த வித உடல் இயக்கங்களும் இல்லாமல் நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்வதால் பல பாதிப்புகள் உண்டாகும்,எனவே குறைந்தது 30 முதல் 40 நிமிடம் கட்டாயமாகும்.மேலும் இதய ஆரோக்கியத்தில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது எனவெ ஊட்டசத்து மிக்க உணவு முறைககளை மேற்கொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மகளிர் உரிமைத் தொகையால் எங்களுக்குத் தான் பிரச்சினை"- திடீர் போர்க் கொடி தூக்கிய வருவாய்த்துறை.. என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.