ETV Bharat / state

ஊரடங்கால் உணவின்றித் தவிக்கும் விலங்குகள்: உணவளிப்பது குறித்து அரசு யோசனை கூற நீதிமன்றம் உத்தரவு! - How to feeding stray dogs

சென்னை: கரோனா ஊரடங்கால் உணவில்லாமல் தவிக்கும் தெரு விலங்குகளுக்கு எப்படி உணவு வழங்குவது என்ற யோசனைகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

How to feeding stray dogs and animals, MHC queries

author img

By

Published : May 19, 2021, 7:40 PM IST

கரோனா இரண்டாவது அலையின் பரவலைத் தடுக்க அரசு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் உணவு, குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மதர்ஸ் ஆஃப் அனிமல்ஸ் அறக்கட்டளையின் தலைவரான வி.இ.சிவா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஊரடங்கு காரணமாக விடுதிகள் மூடப்பட்டுள்ளதால் தெரு நாய்கள், விலங்குகள் உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு எப்படி உணவு, தண்ணீர் வழங்கலாம்? என்பது குறித்த யோசனைகளைத் தெரிவிக்கும்படி, மனுதாரர் தரப்புக்கும், அரசுத்தரப்புக்கும் அறிவுறுத்தி, விசாரணையை நாளைக்கு (மே 20) தள்ளி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.