ETV Bharat / state

தென் மாவட்டங்களில் அதிமுகவின் மவுசு குறைகிறதா? - ஈபிஎஸ்சின் திமுக எதிர்ப்பு கை கொடுக்குமா? - MK Stalin

கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை போன்ற விவகாரங்களில் அதிமுக தங்களது எதிர்ப்பை முன்னெடுத்து வரும் நிலையில், அதிமுகவின் அரசியல் வியூகம் குறித்து விரிவாக ஆராய்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தென் மாவட்டங்களில் அதிமுகவின் மவுசு குறைகிறதா? - ஈபிஎஸ்சின் திமுக எதிர்ப்பு கை கொடுக்குமா?

author img

By

Published : May 31, 2023, 8:06 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் சமீப காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசுக்கு எதிரான பல்வேறு விவகாரங்களில், அதிமுக தங்களது எதிர்ப்பை கடுமையாக முன்னெடுத்து வருவதாக தெரிகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று திமுக எதிர்ப்பு அரசியலை அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேகப்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், பிரதான எதிர்கட்சியாக இருக்கின்ற அதிமுக, பல்வேறு விவகாரங்களில் செயல்படாமல் மெளனம் காத்து வந்தது. இதற்கு, அதிமுகவில் நிலவும் ஒற்றைத் தலைமை விவகாரம் என அப்போது பேசப்பட்டது. இதனால், நாங்கள்தான் எதிர்கட்சி என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லும் நிலையும் ஏற்பட்டது. இதனிடையே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சுமார் 10 மாதங்கள் தொடர்ந்தது.

இதனால் அதிமுகவை கடந்து மற்ற விவகாரங்களில் அந்தக் கட்சியால் கவனம் செலுத்த முடியவில்லை. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கிய எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என அனைத்திலும் அங்கீகாரம் பெற்றார். முக்கியமாக, சில மாதங்களுக்கு முன்புதான் அதிமுகவின் பொதுச் செயலளாராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்தது.

அண்ணாமலை உடன் மோதிய ஈபிஎஸ்: இவ்வாறு ஓபிஎஸ் தரப்பினரை நீக்கி முழுமையாக அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி, தனது அடுத்தக்கட்ட நகர்வுகளை முன்னெடுக்கத் தொடங்கினார். குறிப்பாக, இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, கொலை, கொள்ளை அதிகரிப்பு, பாலியல் வன்புணர்வுகள், கள்ளச்சாராயம் போன்ற விவகாரங்களில் எதிர்ப்பை பதிவு செய்த ஈபிஎஸ்ஸின் செயல்பாடுகள் பெரிதாக பேசப்படாமலே இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதேநேரம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் அதிகமாக ஏற்பட்டது. அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நேரடியாக கருத்து மோதல்கள் ஏற்பட்டன. கூட்டணி கட்சியாக இருந்தாலும், கொங்கு பகுதியில் அண்ணாமலையின் வளர்ச்சியை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை என கூறப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிய பாஜக மேலிடம், எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இருக்கும் கருத்து மோதல்களை சரி செய்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்படுவது குறைந்தது. அதிமுகவும், பாஜகவும் தங்களுக்கான அரசியலை தனித்தனியாக செய்யத் தொடங்கினர். இந்த நிலையில்தான் ஆளும் திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, 12 மணி நேர வேலை மசோதா, பிடிஆரின் ஆடியோ விவகாரம், திமுகவினருடைய சொத்துப்பட்டியல் வெளியீடு போன்ற விமர்சனங்கள் இதில் அடங்கும்.

இதன் தொடர்ச்சியாக, விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரத்தை முழுமையாக அதிமுக கையில் எடுத்ததாகவே கருதப்படுகிறது. அண்ணாமலையும் இந்த விவகாரத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல நினைத்ததாகவும் கூறப்படுகிறது. கள்ளச்சாராய மரண விவகாரம் குறித்தும், டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் ஊழல் குறித்தும் ஆவணங்களை திரட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி பழனிசாமி பேரணியாக சென்று மனு அளித்தார்.

அதிமுகவினர் கூறுவது என்ன? இதனையடுத்து, நேற்றைய முன்தினம் (மே 29) மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய மரணங்கள், சட்ட ஒழுங்கு பிரச்னை சீர்குலைந்துள்ளது என்று அதிமுக போராட்டம் நடத்தியது. சென்னையைத் தவிர்த்து அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களில் போராட்டம் நடத்திய அதிமுகவினர், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்த அதிமுகவினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், திமுக அரசின் செயல்பாடுகளை தீவிரமாக எதிர்க்கவும் அதிமுகவினர் தயாராகி வருகின்றனர் என பேசப்படுகிறது. ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி மற்றும் திமுக எதிர்ப்பை எடப்பாடி பழனிசாமி வேகப்படுத்துவதற்கான காரணம் குறித்து அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாகவே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி எதிர்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில், கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் மரணம் அடைந்தனர்.

இதை பெரிய அளவில் முன்னெடுக்க நினைத்த எடப்பாடி பழனிசாமி, பேரணியாகச் சென்று ஆளுநரிடம் மனு அளித்தார். அண்ணாமலைக்கும் இதே போன்று டெல்லி மேலிடத்தில் இருந்து இந்த விவகாரத்தை கையில் எடுக்க தகவல் வந்தது. இந்த விவகாரத்தில் பாஜக எடுக்கும் முன்னெடுப்பை விட, எதிர்கட்சியான அதிமுக பல மடங்கு முன்னெடுக்க வேண்டும் என ஈபிஎஸ் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தார்.

இதன் மூலம் நாங்கள்தான் எதிர்கட்சி என்று கூறும் அண்ணாமலையையும் எதிர்கொள்ளலாம், அதிமுகதான் தமிழ்நாட்டின் பிரதான எதிர்கட்சி என்பதை நிரூபணம் செய்யலாம் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்கு. இதனால்தான் திமுக எதிர்ப்பு அரசியலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார்” என கூறினார்.

தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு மவுசு குறைகிறதா? இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “திமுக எதிர்ப்பு அரசியல் எந்த அளவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுக்கும் என்பதை நாடாளுமன்றத் தேர்தலில்தான் பார்க்க வேண்டும். ஆனால், டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு போராட்டம் நடத்தக் கூறியிருந்தாலும், அவரே போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தாலும், ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் கேள்வி எழுப்புவது ஜனநாயத்திற்கு நல்லது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல், நிர்வாக ரீதியிலான குளறுபடிகளை எதிர்கட்சிகள் சுட்டிக் காட்டலாம். அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். ஆனால், அதிமுகவில் இருந்து பல பிரிவுகளாக அணிகள் பிரிந்து கிடைக்கிறது. முன்பைவிட அதிமுகவின் வாக்கு வங்கி மிகவும் தேய்ந்துள்ளது.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் அதிமுக, அடிமட்டத்தில் தேய்ந்துள்ளது. வெறும் திமுக எதிர்ப்பு மட்டுமே அதிமுகவை பலப்படுத்த உதவாது. ஏனென்றால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் இல்லை. இருந்தாலும் அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வளர்ச்சிக்கு இன்னும் பல முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமுல் நிறுவனத்திற்கு ஆந்திரா ஆதரவு... முதலமைச்சர் ஜெகனின் திட்டம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.