ETV Bharat / state

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் கவனிக்கப்படுகின்றனரா? - கரோனா பாதிப்பு

சென்னை: கரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் முறையாக கவனிக்கப்படுகிறார்களா? என்பது குறித்த இந்த செய்தித் தொகுப்பில் அலசலாம்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் கவனிக்கப்படுகின்றனாரா?

author img

By

Published : Jul 22, 2020, 3:47 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகளவில் இருக்கிறது. இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் 28ஆயிரத்து 732 பேர் உயிரிழந்தும், 1, 192, 915 பேர் பாதித்தும் உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இரண்டாயிரத்து 626 பேர் உயிரிழந்தும், ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இதில் சென்னையில் கரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு போதிய கவனிப்பு வசதிகள், மருந்துகள், உணவுகள் என அடிப்படை வசதிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரித்தபோது பல்வேறு பாதிப்புகள் இருப்பது தெரிய வந்தது.

குறிப்பாக, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் என சிற்றுண்டியுடன், பால், முட்டை, காய்கறி வகைகள், பழச்சாறு, சுண்டல் உள்ளிட்டவை வழங்கப்படுவதால் அவற்றை பற்றி குழப்பங்கள் இல்லை என்கிறார்கள். அதேசமயம், சுகாதார வசதிகள் என வரும்போது போதிய கழிவறைகள் இல்லாமல் இருப்பதும், அவை அடிக்கடி சுத்தப்படுத்தும் நிலையும் எப்போதும்போல் கடைப்பிடிக்கப்படுதில்லை என்பது கரோனா வைரஸ் தொற்று பாதிப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

சென்னையில் இன்றைய நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரத்து 839 பேர் ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, கே.எம்.சி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் வெளியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். குறைந்தது 14 நாள்கள் வரை சிகிச்சை பெறும் இவர்களுக்கு மேற்கண்ட பல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர். மற்றபடி உணவு, மாத்திரைகள் வழங்குவது உள்ளிட்ட விஷயங்களில் குறை சொல்லும் நிலை இல்லை என்கிறார்கள் தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள்.

இது குறித்து டாக்டர். சாந்தி கூறுகையில், "உணவைப் பொறுத்தவரை சிகிச்சையில் உள்ளவர்களுக்கும் ஐசியூவில் உள்ளவர்களுக்கும் ஒரே மாதிரியான உணவுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இது சரியாக இருக்காது. ஐசியூவில் உள்ளவர்களுக்கு கஞ்சி போன்ற உணவுகள் வழங்கப்பட வேண்டும்.

மேலும் தற்போதைய நிலையில் 100 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் வீதம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே உள்ள மருத்துவர்களுடன் தற்போது தற்காலிகமாக ஆயிரம் மருத்துவர்கள் பணியில் சேர்க்கப்பட்டும் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதற்குக் காரணம் முறையாக ஷிப்ட்கள் வழங்கப்படாமையே.. தற்போது ஒரு மருத்துவர் 12 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களால் பி.பி.இ கவச உடையுடன் அத்தனை நேரம் இருப்பது சாத்தியமற்றது" என்கிறார்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் பேசுகையில், சென்னையை பொறுத்தவரை அதிக அளவில் நோயாளிகள் இருந்தும் ஓரளவிற்கு நோயாளிகளுக்கு பாதிப்புகள் இல்லாதபடி சிகிச்சை வழங்கி வரும் சுகாதாரத் துறை பிற மாவட்டங்களில் இதற்கு நேர்மாறான நிலையில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு எந்த வசதிகளும் சரியாக செயல்படுத்தாமலும், சுகாதார வசதிகள் முறையாக செய்யப்படாமலும், சரியாக உணவு வழங்கப்படாமலும் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் தினந்தோறும் கேட்பதால் அரசு பிற மாவட்டங்களில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.

அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் மக்களாகிய நாமும் கடைப்பிடித்தால் கரோனா மட்டுமின்றி இனி எந்த பெருந்தொற்று வந்தாலும் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்பதில் ஐயம் வேண்டாம்.

இதையும் படிங்க...ஐஐடி நுழைவுத் தேர்வுகளால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள்: ஈடிவி பாரத் விவாதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.