ETV Bharat / state

அகதிகள் முகாமில் கரோனாவை தடுத்தது எப்படி? விளக்குகிறார் மருத்துவர் நடராஜன் - கரோனா வைரஸ் தொற்று

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் கரோனா வைரஸை தடுத்தது எவ்வாறு என்பதை மருத்துவர் நடராஜன் ஈடிவி பாரத்திற்கு விளக்குகிறார்.

How did the corona stop at the Sri Lankan refugee camp Dr. Natarajan explains

author img

By

Published : Dec 14, 2020, 3:56 PM IST

Updated : Dec 15, 2020, 5:15 PM IST

சென்னை: இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் பாதிப்படைந்த தமிழர்கள் தங்களது உயிரைக் காத்துக் கொள்ளும் நோக்கில் தமிழ்நாட்டிற்கு விரைந்தனர். இவர்களைக் காக்கும் பொருட்டு இவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளையும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்ய தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் பல இடங்களில் இலங்கை அகதிகள் முகாமை ஏற்படுத்தியுள்ளன.

இந்த முகாம்களில் வசிக்கும் மக்கள் தங்களது உணவிற்காகவும், வாழ்வாதரத்திற்காகவும் அரசை பெருமளவில் எதிர்பார்த்து காத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தினக் கூலிகளாகவே உள்ளனர். அதுமட்டுமின்றி, இவர்கள் அனைவரும் மிகவும் நெருக்கமான பகுதிகளிலும் குறைவான அடிப்படை வசதிகளைக் கொண்டும் அன்றைய தினத்திற்கான சிந்தனைகளுடன் மட்டுமே வசித்துவந்தனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகை அச்சுறுத்திவந்த கரோனா இந்தியாவையும் தாக்கத் தொடங்கியது. இதனால் முன்னெச்சரிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் தினக்கூலிகளே. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஒரு நாள், ஒரு வாரம், ஒரு வாரம் என நீண்டு கொண்டே சென்றதால் அவர்கள் தங்களுக்கான வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த மிகவும் தடுமாறினர்.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் 107 இடங்களில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் உள்ளவர்களும் தங்களது அடிப்படைத் தேவைகளுக்கும், மருத்துவ, சுகாதார தேவைகளுக்கும் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த மக்கள் மிகவும் நெருக்கமானப் பகுதிகளில் வாழ்வதால் அவர்களுக்கான தொற்று பரவும் வேகமும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருந்தன.

தற்போது தமிழ்நாட்டில் கரோனா வைரஸிற்கான தாக்கம் குறைந்துள்ள நிலையில், அகதிகள் முகாம்களில் தங்கவைப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் எவ்வாறு கரோனா வைரஸினால் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட்டனர் எனவும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு மீட்கப்பட்டனர் எனவும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார், தொண்டு நிறுவனமான ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக மருத்துவப் பிரிவில் உள்ள நடராஜன்.

இதுகுறித்து அவர் பேசுகையில், அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் முழுவதுமாக கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். முகாமில் இருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் முகாமிற்கு திரும்பும்போது பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை முற்றிலுமாக தனிமைப்படுத்தி, தேவையான உணவுகள் மருந்துப் பொருள்கள் அளித்து முறையாக பராமரிக்கப்பட்டனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.

தொடர் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் அவர்களிடம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. முதன்முதலாக ஜூன் மாதத்திவ் அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த நபர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, முகாம்களில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுடன் இணைந்து எங்களது தொண்டு நிறுவனத்தினர் பாதுகாப்பையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பலப்படுத்தினர்.

மருத்துவர் நடராஜன்

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, மருத்துவ முகாம்கள், கபசுர குடிநீர் போன்றவற்றை அளித்தும், அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தும் மருத்துவ பாதுகாப்பை தீவிரப் படுத்தினோம் என்றார்.

மேலும் பேசிய அவர், ஜூன் மாதத்திலிருந்து தற்போதுவரை அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 487 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு போன்ற பிற நோய்களைக் கொண்டிருந்த நான்கு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அரசு, மருத்துவர்களுடன் இணைந்து முகாம்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொண்டதால் தமிழ்நாட்டில் 107 இடங்களில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் தற்போது யாருக்கும் கரோனா நோய்த்தொற்று இல்லை என்றார் பெருமிதமாக.

Last Updated : Dec 15, 2020, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.