ETV Bharat / state

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சி.விஜயபாஸ்கர் சிக்கியது எப்படி? - முழு விவரம் - C Vijayabaskar Raid Full deatils

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் முழு பிண்ணனி குறித்து காணலாம்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சி.விஜயபாஸ்கர் சிக்கியது எப்படி? - முழு விவரம்

author img

By

Published : Sep 14, 2022, 7:23 AM IST

சென்னை: தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி தரமான மருத்துவ கல்லூரிகள் நாடு முழுவதும் தொடங்கப்பட வேண்டும். தகுதியான மருத்துவ பேராசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு தரமான மருத்துவக் கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2020 ஆம் ஆண்டு பல்வேறு விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டன.

இதன்படி குறைந்தபட்சம் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்கப்படும்போது 300 படுக்கை வசதிகளும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து வசதிகளுடன் முழுமையாக செயல்பட்டு இருக்க வேண்டும் என்ற தகுதி உள்ளது. இதுபோன்ற அடிப்படைத் தகுதி மற்றும் ஆய்வு மேற்கொண்ட பிறகுதான் மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி: இதன் தொடர்ச்சியாக ‘எசன்ஸ்யலிட்டி சர்டிபிகேட்’ என்ற அனுமதியை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அனுமதியை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முறைகேடாக வழங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இதுபோன்று அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகு மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறையில் உள்ளது. இந்நிலையில் வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவரான ஐசரி கணேஷ், கடந்த 2019 ஆம் ஆண்டு திருவள்ளூரில் வேல்ஸ் மருத்துவக்கல்லூரியை 150 மாணவர் இருக்கைகளுடன் நடத்துவது தொடர்பாக அனுமதி கேட்டு மாநில சுகாதாரத் துறைக்கு விண்ணப்பித்துள்ளார்.

சேலம் மருத்துவர் குழு: இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 2020 ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்திலிருந்து மருத்துவ கல்வி இயக்குனரத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 150 மாணவர்கள் படிப்பதற்கு ஏற்றார்போல் தேசிய மருத்துவ ஆணைய விதிப்படி உள்ளதா என ஆய்வு செய்யுமாறு மருத்துவக் கல்வி இயக்குநரத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.

இதன் அடிப்படையில் வேல்ஸ் மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்வதற்கு, சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் நான்கு மருத்துவர்களை மருத்துவக் கல்வி இயக்குனரகம் நியமித்தது. இந்த குழுவில் சேலம் மருத்துவக்கல்லூரியை சேர்ந்த பாலாஜி நாதன், சுஜாதா, குமாரவேல் மற்றும் மனோகர் ஆகிய நான்கு மருத்துவர்கள் அடங்கிய குழு வேல்ஸ் மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டது.

இந்த ஆய்வு மேற்கொள்ளும்போது மருத்துவர் குமாரவேல் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவர் வசந்தகுமார் என்பவர் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றார். இதன் அடிப்படையில் நான்கு பேர் கொண்ட மருத்துவ குழு, வேல்ஸ் மருத்துவக்கல்லூரியில் கடந்த நவம்பர் 2020 ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டது.

குறிப்பாக ரத்த வங்கி செயல்படுவது, நில ஆவணங்கள், ஆப்ரேஷன் தியேட்டர்கள், புற நோயாளிகளுக்கு தேவையான வசதி, படுக்கை வசதி, கல்லூரியில் உட்கட்டுமான வசதி, 150 மருத்துவ மாணவர்கள் படிப்பதற்கான வசதி உள்ளிட்டவற்றை மருத்துவ குழு ஆய்வு செய்து கடந்த நவம்பர் 16 ஆம் தேதி மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தது.

புதிய மருத்துவ குழு: இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மற்றொரு மருத்துவர்கள் அடங்கிய குழு சோதனை மேற்கொண்டது. இந்த திடீர் சோதனையின்போது வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை என்பது தெரிய வந்தது.

மேலும் தேசிய மருத்துவமனை ஆணைய விதிகளை முறையாக பின்பற்றப்படவில்லை என அறிக்கையில் புதிய மருத்துவ குழுவால் சமர்ப்பிக்கப்பட்டது.

அதேநேரம் விதிப்படி 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில், குறைந்தபட்சம் 60% நோயாளிகள் சிகிச்சை பெற்று முழுமையாக இரண்டு வருடம் செயல்பட வேண்டும் என்ற தேசிய மருத்துவமனை ஆணைய விதிகள் மீறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் உதவி இயக்குனர் நகர்ப்புற திட்ட துறை அலுவலர்கள் ஜூன் மாதம் 2020 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய விதிப்படி கட்டுமானம் இன்னும் முழுமை பெறவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நவம்பர் 2020 ஆம் ஆண்டு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனுப்பிய மருத்துவ குழு ஆய்வு மேற்கொள்ளும்போது, வேல்ஸ் மருத்துவக்கல்லூரியில் டீன் சீனிவாச ராஜ் 650 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 270 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் என அதிகமான எண்ணிக்கையைக் காட்டி தவறான அறிக்கை கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

அம்பலமான முறைகேடுகள்: இதன் மூலம் தவறான அறிக்கையை கொடுத்து வேல்ஸ் மருத்துவக்கல்லூரியின் டீன் சீனிவாசராஜ், மருத்துவ குழுவோடு சேர்ந்து எசன்ஸியலிட்டி சர்டிபிகேட் எனப்படும் அத்தியாவசிய வசதிகள் தொடர்பான சான்றிதழ் பெற முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்த நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வசதிகள் தொடர்பான விவகாரத்தில் பலவற்றை மறைத்து நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கலாம் என்பதற்கான அறிக்கை அளித்ததும் விசாரணையில் அம்பலமானது.

மேலும் இந்த நான்கு மருத்துவர்கள் கொடுத்த அறிக்கையில் வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சில குறைபாடுகளை பெயரளவில் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதற்கு நவம்பர் 24 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு சுகாதாரத்த்துறை செயலாளர் தரப்பில் குறைபாடுகளை நிறைவு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வேல்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டு நாட்கள் கழித்து எந்த வித குறைபாடுகளையும் சரி செய்யாமல் பொய்யான அறிக்கையை மருத்துவக்கல்லூரி சமர்ப்பித்ததும் விசாரணையில் அம்பலமானது.

இவ்வாறு வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அனுமதி சான்று வழங்குவதற்கு மருத்துவ இயக்குனரகம் நியமித்த நான்கு மருத்துவர்கள் கொண்ட குழுவை தன் அதிகாரத்தை பயன்படுத்திய சி.விஜயபாஸ்கர், தவறான ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வைத்து அனுமதி வழங்கியது தெரிய வந்துள்ளது.

இதற்காக வேல்ஸ் கல்விக் குழுமத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மூலம் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கு பணமதிப்பு லாபம் அடைந்துள்ளதாகம் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள்: இந்த விசாரணையை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சி.விஜயபாஸ்கர் மற்றும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாச ராஜ், மருத்துவ கல்லூரியை ஆய்வு மேற்கொண்ட நான்கு அரசு மருத்துவர்கள் குழு என ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் நேற்று சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் முடிவில் 18.37 லட்சம் ரூபாய் பணம், ஒரு கிலோ 872 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 120 ஆவணங்கள், 1 பென்டிரைவ், 2 ஐ போன்கள் மற்றும் 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இதையும் படிங்க: முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.